syedali's படம்

நூல் இழை
வாழ்க்கை பாதை அது 
சறுக்கித் தடுமாறுபவர்கள் 
விதியை பழிக்கிறார்கள்

மெல்லிய பாதை அது 
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள் 
தவறி விழுபவர்கள்
விரிந்து   
நீளும்  இப்பாதையில் 
அக்கறை கடந்தவர்கள் யாரோ 
இறைவனுக்கே வெளிச்சம்

சுய 
உணர்வும் உணர்ச்சியுமுள்ள 
சதை பொதிந்த உயிர்கள் 
சிரிக்கிறது அழுகிறது 
இங்கு 
ஆத்மாக்களும் அழுவதுண்டு 
தன்சதை பிரிந்த துக்கத்தில் 


ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட 
நன் வாழ்க்கை முறைகள் 
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ 


வெட்ட வெளிச்சத்தில் 
சுயவாழ்வின்  இருளை உணர்ந்தும் 
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள் 
மதி மழுங்கியவர்கள் 
சுயத்திலும் 
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும் 
கண்ணீரை பனித்துளி என்றும் 
உதிரத்தை தேன்துளி என்றும் 
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு 
...? மகான் அல்ல 

0
Your rating: None
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post_10.html