மனிதன், முழுவேகத்தில் போராடிக்கொண்டிருக்கிறான்,
மிருகங்கள்,காடுகள்,வயல்வெளிகள்,
இவைகளையெல்லாம் வென்றுவிட்ட களிப்பில்,
இனி போராட துடிப்பது,
கலாச்சாரம்,மனிதநேயம்,மனிதன்,
இவைகளையும் வெற்றி கொண்டால்,
பூமியில் இல்லாமல் போவது மனிதஇனம் தானே,
இது மனிதனுக்கு இல்லை என்றாலும்,
பூமிக்கு நற்செய்தியே,
வாழட்டும் பூமி,
விடைபெற தயாராகுங்கள் மனிதர்களே.
-மீனாவிக்னேஷ்
கருத்துகள்
இருந்தாலும் அவன் தனது மனப்
இருந்தாலும் அவன் தனது மனப் போராட்டத்திலிருந்து விடுபடப் போவதில்லையே. பாராட்டுக்கள் மீனாவிக்னேஷ்.
மனிதன் ஒருவன் தான் "தான்
மனிதன் ஒருவன் தான் "தான் கெட்டாலும் அடுத்தவரும் கெட நினைப்பான்" எனவே அவன் விடைபெறும் முன் பூமியை அழிவுக்கு தள்ளி தானும் உடன் செல்வான் என்பது உண்மை!
நல்லக் கவிதை ஆராயத்தக்கது!பாரட்டுக்கள்!
மனித முயற்சிகள் நன்மையிலும்
மனித முயற்சிகள்
நன்மையிலும் முடியலாம்
தீமையிலும் முடியலாம்
இதனால்
பூமி
ஒரு போதும்
கவலைப்பட்டதில்லையே
அதனால்
வாழ்வதோ அழிவதோ
மனிதன் தானே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
கவிதை அருமை மனிதன் செயற்கையை
கவிதை அருமை
மனிதன் செயற்கையை வெல்கிறான், இயற்கையை இன்னும் வெல்ல இயலவில்லை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








