நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!
கருத்துகள்
விக்கிரமாதித்தன் போல்
விக்கிரமாதித்தன் போல் கொஞசமும் மனம் தளராமல் சமுதாயதைத் திருத்த முயலும் உங்களைப் பாராட்டுகிறேன். நன்று.
அருமை; கருத்துதனில்
அருமை; கருத்துதனில் முதுமை....; அழகான கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
அன்பரே! இக்கவிதையைப்
அன்பரே! இக்கவிதையைப் படித்தவுடன் நான் காலையில் ஓட்டம் உடற்பயிற்சி செய்த நாட்கள் ஞாபகம் வந்துவிட்டது! ஆனாலும் தற்பொழுது நடக்கும் முறைகளை சரியாகச் சொன்னீர்கள்!

விலை கொடுத்து நோய் வாங்குவது
விலை கொடுத்து நோய் வாங்குவது போல இன்றைய பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளது.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









