கற்பாறைகள் கரையிலிருந்து
வெகுதூரம் பரந்திருக்கின்றன
கரையில் அரிக்கும் அலைகள்
அம்மா அதட்டுவது போல
அடித்தன.
எல்லாப் பிறப்புகளும் தானும் உயிர்வாழ
இரத்தம் பாய்ச்சுகின்றாள் நீராக.
சில்லென்று ஓடும் சிறு நதியும்
கரைமிதித்தேறும் வன்கடலும்
கரையும் அவள்தான்.
உயிருள்ள கிரகத்தில்
உயிர் வாழ்பவர்க்கு எத்தனையோ
வஞ்சகங்கள் செய்பவளும் அவளே.
காற்றில் வாழும் மனிதனுக்கு
கடலில் வாழ அனுமதியில்லை.
மீனுக்கும் அவ்வாறே.
தரையில் கொல்லப்படும் உயிர்கள்
கடலில் உடனடியாக
அடுத்த பிறப்பெடுக்க முடிகிறது,
தரையிலும் அது உண்மை.
முள்ளிவாய்க்காலின் கரையில்
இறந்த அத்தனை உயிர்களும்
அருகில்
நந்திக்கடலில் தான் இருக்கின்றன.
ஒவ்வொரு மாவீரன் சாயும் போதும்
ஒரு மீன் பிறந்தது.
மறுபிறப்பு என்னும் வாய்களினூடாக
உடல்களைக் களைந்து எறிந்தபடி
உயிரின் பாய்ச்சல் தொடர்கின்றது.
இந்த நிலத்தில் மட்டும்
போரின் உற்பத்தி
தொடர்ந்தும் நடக்கிறது.
இயந்திரத் துப்பாக்கியின் வாயாக
உடல்களைக் கக்குகிறது.
மறுபிறப்பு.
பூமியின் ரத்தமாய் தண்ணீர் பொங்க
செவ்வாயின் நிறமாக ரத்தம் பொங்கியது.
அசை!
என்னும் அதட்டல்
அடித்து அடித்து உறுமியது.
தோல்வி எனும் தொப்பிகள்
வெற்றி எனும் கிரீடத்தை வரவேற்பதில்லை.
அலை கொண்டு அடித்து அடித்து
அசையாத கற்களுடன்
மாதகல் முருங்கனிலும்
முள்ளிவாய்க்காலிலும்
மட்டக்களப்பிலும்
சென்னை
மாபல்லிபுரம் உள்ளிட்ட
மற்ற எல்லா இடங்களிலும்
கடலன்னை கேட்கின்றாள்.
பொங்குதல் எப்போது?
கருத்துகள்
பொங்குவது எப்போது? வேண்டாம்
பொங்குவது எப்போது?
வேண்டாம் கடலன்னையே...
நல்லவர்கள் இன்னும் இருப்பதால் இன்றும்
நிலைத்து இருக்கிறது உலகம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நண்பா -
நண்பா - நீ
எடுத்துரைத்தது
ஈழத் தமிழரின் புண்கள்
இன்னும் ஆறாத வரை
எப்படிப் பொங்குவதென்றே?
"மறைகின்ற கதிரவன்(சூரியன்)
செந்நீர்(இரத்தம்) சிந்துவதால் தான்
மறுநாளும் விடிகின்றது" என்று
தமிழகத்துப் பாவலர்(கவிஞர்)
இரும்பொறையின் பா வரிகளை
மீட்டுப் பார் நண்பா...
கதிரவன்(சூரியன்) பணிகளை
நினைவில் நிறுத்திப் பொங்கித் தான்
ஆகவேண்டுமே நண்பா!

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







