kirikasan's படம்

3. மோகம் கொண்டணைத்த மோகினி..!

துடித்து எழுந்துநின்றேன் துப்பி உமிழ்ந்து வைத்தேன்
பிடித்ததோ கிண்ணமல்ல பிளந்ததோர் மண்டையென
கண்டேயக் காமுகியைக் கனலெறித்த நெஞ்சோடு
மீண்டும் கண்பார்க்க மேனிஅதிர்ந் தாடியதே

பெண்ணல்ல அங்கே பிறிதோர் உருக்கண்டேன்
வெண்ணெய் உருகுமெழில் விளைந்த உடல்கறுத்து
கன்னம்எரிந்து முகம் கண்பிளந்து வாய்வெடித்து
என்ன சொல்வேன் இருளில் பேயாய் அவள்நின்றாள்

கிட்டே அவள் அணுக கிளர்ந்து மணம் எழுந்து
சுட்டு மயிர்பொசுங்குவதாய் தோன்றிடவே சுற்றி
இங்குமங்கும் பார்த்தேன் இருந்த இடம்வெளியே
கட்டைஅடுக்கியொரு கடும்தீ எரியகண்டேன்

இதுவென்ன சுடுகாடோ எரிவதென்ன பிணங்களோ
அருந்தேவி இவள்யாரோ ஆள் உண்ணும் மோகினியோ
விருந்தாய் எனையழைத்து வேறுபல பேய்களுடன்
இருந்துண்ண வந்தாளோ என்றே அவள் பார்க்க

என்னே ஒரு கோரம் எரிதீயில் வீழ்ந்தெழுந்து
கன்னிக் கறுத்த உடல் கலைந்த கேசங்கள்
எரித்து உடைந்தகால் இடைதொங்கக் கையினிலே
பிடித்த பழத்தட்டில் பிணங்கிழித்த அங்கங்கள்

பார்த்தேன் அவள் முகத்தைப் பாவியவள் கண்களிலே
வேர்த்தேன் ஓர்விழியில்லை வெற்றிடமாய்க் குழிஇருக்க
சேர்த்தே உடல் எரிந்து சிறுதீயின் காயங்கள்
பூத்தே உடல்முழுக்கப் புண்ணாகிக் கிடந்ததய்யோ

செத்த பிணம் எரிந்த சிதை எழுந்து வந்ததுவாய்
ரத்தம் குடிக்கவந்த இருளிதனைக் காமமுற்று
பித்தனென ஆனேனே பிசாசுதரும் மேனிசுகம்
அத்தனைக்கும் ஏங்கி அழிந்திடவென் றாகினனே

கன்னியவல் தீயின்முன் கானமிசைக்கையிலே
இன்பமதை ஒன்றெண்ணி இருந்த இடம்பாராமல்
என்ன அழகென்றே பெண்ணழகில் பித்தனாய்
பின்னால் பிணம்தின்னும் பேய்விரும்பி வந்தேனே

முன்னால் இருந்தவளோ முகம்தீய்ந்து கிழவியென
கன்னம் குழி விழுந்து கடைவாயில் நீர் வழிய
காலொன்று தீயெரிந்து கரியாகி சிறுத்திருக்க
வழிந்து குறுமார்பு வற்றியதாய் எனைப் பார்த்து

வாராய் எனதழகே வந்தே என் கனியுடலைக்
கூடாய் கூடிஒரு கோடிஇன்பம் தந்திடுவாய்
மோகம் களைந்துஎனை முத்தமிட்டுமுத்தமிட்டு
தாகம்தணித்துவிடு தந்துவிடு நீ எனக்கு

என்றே இருகரமும் எடுத்துயர்த்தி அணைப்பதுபோல
வந்தாள் நடைதளர வாழ்வுடனே முடியுதென
எண்ணி இருந்தபாற் செம்பை எடுத்தவளை
கொண்டே அடிப்பதற்கு கொள்ளக் கை செம்பல்ல

மண்டைச் சிறுஓடு மனிதஉடல் தின்றபின்னே
கொண்டதோர் மிச்சமென குலைநடுங்க கவனித்து
விட்டே எழுந்து இடம் விரைந்தோடிப் போகவென
பட்டது மனதில் ஆனால் பாவியுடல் எழவில்லை

ஓட்டம் எடுத்தேன் ஒடினேன் கால்கள்தான்
ஆட்டம் புரிந்ததன்றி அந்த இடம் நகரவில்லை
வாடிச் சோர்ந்துமன வேதனையில் நான்திரும்ப
காட்டுகரும் பேயோ கையணைக்க வந்ததடா

(அடுத்ததில் முடியும்)

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

ஐய்யைய்யோயோ என்னே ஒரு கோரம்


10

ஐய்யைய்யோயோ

என்னே ஒரு கோரம் எரிதீயில் வீழ்ந்தெழுந்து
கன்னிக் கறுத்த உடல் கலைந்த கேசங்கள்
எரித்து உடைந்தகால் இடைதொங்கக் கையினிலே
பிடித்த பழத்தட்டில் பிணங்கிழித்த அங்கங்கள்
செத்த பிணம் எரிந்த சிதை எழுந்து வந்ததுவாய்

Shock Shock Shock Shock Shock

ஐய்யைய்யோயோ

பச்சப்புள்ளைய இப்படியா பயமுறுத்துவது

இன்னைக்கு எப்படி தூங்க.....

Sleep |-) :sleep:

ஓட்டம் எடுத்தேன் ஒடினேன் கால்கள்தான்
ஆட்டம் புரிந்ததன்றி அந்த இடம் நகரவில்லை
வாடிச் சோர்ந்துமன வேதனையில் நான்திரும்ப
காட்டுகரும் பேயோ கையணைக்க வந்ததடா

என்னையும் சேர்த்துக்கோங்க... நானும் வரேன்...
: )


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

"கன்னியவல் தீயின்முன்


"கன்னியவல் தீயின்முன் கானமிசைக்கையிலே
இன்பமதை ஒன்றெண்ணி இருந்த இடம்பாராமல்
என்ன அழகென்றே பெண்ணழகில் பித்தனாய்
பின்னால் பிணம்தின்னும் பேய்விரும்பி வந்தேனே"

மிகவும் அருமை...

Shock Shock Shock Shock Shock Shock Shock Shock Shock Shock Shock


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..