திருமணத்திற்கு முன்பு
காதலன் பேசினான்...
அவன் பேச்சை
அவள் காது கொடுத்துக் கேட்டாள்..
அமைதியாக....
திருமணத்திற்குப் பின்பு
காதலி பேசினாள்...
அவள் பேச்சை
அவன் காது கொடுத்துக் கேட்டான்...
அமைதியாக...
ஒரு குழந்தைக்குப் பிறகு
இருவருமே காரசாரமாகப் பேசினர்...
அவர்கள் பேச்சை
அக்கம் பக்கத்தினர் காது கொடுத்துக் கேட்டனர்...
அதிசயமாக...
கருத்துகள்
பேச்சின் வடிவம் மாறும் வடிவை
பேச்சின் வடிவம் மாறும் வடிவை தாங்கள் தந்த கவிதையில்
காணமுடிகிறது....

ஆமாம்! அக்கம்
ஆமாம்!
அக்கம் பக்கத்தினர்
காது கொடுத்துக் கேட்குமளவுக்கு
வாழ்வில் மாற்றம்
அப்படித்தான்...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஐயா உண்மையை அழகாகச்
ஐயா உண்மையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! அது வேறொன்றுமில்லை யார் வெற்றி பெருவது எனும் போட்டியாக இருக்குமோ?








