sugiri's படம்

மறந்து போன தன் பெயரை கண்டுபிடித்த ஒரு ஈ யின் தேடலை பாட்டாக என் தந்தை பாடுவார்.

கொழு கொழு கன்றே
கன்றின் தாயே
தாய் மேய்க்கும் ஆயா
ஆயாவின் கைக்கோலே
கோலெடுத்த கொடி மரமே
கொடி மரத்துக் கொக்கே
கொக்கு நீராடும் குளமே
குளத்தில் வாழும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைச்சட்டியே
சட்டி செய்யும் குயவா
குயவனிடத்து மண்ணே
மண்ணில் இருக்கும் புல்லே
புல்லு திங்கும் குதிரையே
என் பேரு என்ன?
'ஈ ஈ ஈ ஈ '
குதிரை கனைக்க ஈ க்கு தன் பெயர் ஞாபகம் வந்ததாம்.

இந்த பாடல் வேறு யாருக்காவது தெரியுமா/ஞாபகம் வருதா?

5.77778
Your rating: None Average: 5.8 (9 votes)

கருத்துகள்

vinoth's படம்

பாட்டு நல்லா


4

பாட்டு நல்லா இருக்கு
புதிதாய் கேட்கிறேன்

ஒரு சந்தேகம்: குதிரை ஈ ஈஈஈ என்றா கனைக்குமா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sugiri's படம்

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு


எனக்கும் அந்த சந்தேகம் உண்டு வினோத். இந்த பாட்டு கேள்வி ஞானம் தான், எழுத்து வடிவத்துல எங்கேயும் படிச்சதில்ல. ஒருவேளை ஹீ ஹீ... என்பது ஈ ஈ ஆகியிருக்கலாம்.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Siju's படம்

குதிரை எப்படி கணைக்கும்னு ஒரு


குதிரை எப்படி கணைக்கும்னு ஒரு போஸ்ட்டே போடலாம் போல இருக்கே... கொய்யால... குதிரை மாதிரி கணைச்சுப் பாருங்க, ஈ னு தான் வரும்...

saravanamuthu's படம்

பாட்டு நல்லா தான் இருக்கு! ஹீ


4

பாட்டு நல்லா தான் இருக்கு!
ஹீ ஹீ... என்றும் குதிரை கணைக்காதே!!

sugiri's படம்

http://www.youtube.com/watch?


http://www.youtube.com/watch?v=0vSmiq7CrCk&feature=related

bye


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


rajudranjit's படம்

ஒன்றை நம்பி ஒன்று அதே போல்


5

ஒன்றை நம்பி ஒன்று அதே போல் அதன் அர்த்தமும் இணைந்திருப்பது நல்ல பாடல்!

குதிரையிடம் பெயர் கேட்டால் அது கணைக்கும் ஒலியே பதில் என வரும், விளையாட்டுப் பாடலானாலும் விவரமான கருத்துள்ளப் பாடல்,

இது மாதிரி பாடல்களை நான் கிராமங்களில் வயதானவர்கள் பாடுவதைக் கேட்டுள்ளேன், அவர்களிடம் விளக்கம் கேட்டால் அதன் விளக்கம் நம்மை வியக்க வைக்கும் ஆனால் நண்பரே!
இப்பாடலை முதன்முறையாக இப்பதிவில் காண்கின்றேன், தங்கள் தந்தையிடம் உள்ள பாடல்களை கேட்டு வாங்கி இத்தளத்தில் பதிந்தால் மகிழ்ச்சியுறுவோம்! Clap Clap Clap

sugiri's படம்

நன்றி திரு.ராஜு!


நன்றி திரு.ராஜு!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

குதிரையின் கனைப்பு 'ஈ'யின்


6

குதிரையின் கனைப்பு
'ஈ'யின் பெயரா
நம்ப முடியவில்லையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Siju's படம்

வழக்கம் போல அருமை அக்கா...


10

வழக்கம் போல அருமை அக்கா...

sugiri's படம்

கருத்துக்கு நன்றி திரு.யாழ்,


கருத்துக்கு நன்றி திரு.யாழ், திரு.ராஜு மற்றும் சகோதரர் சிஜு!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Flower's படம்

அருமை..


10

அருமை.. Clap Clap