vinoth's படம்

பெண்ணே நீ !

பெண்ணே நீ !
==============

மலருக்கும் நிலவுக்கும்
பேசப்படும் உவமைகளில்...
புகழப்படும் வார்த்தைகளில்...
புழங்காகிதம் கொண்டதால்
மழுங்கடிக்கப்படுகிறது
உன் அறிவும் புகழும் !

உன் அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
தோண்டப்படுகிறது
உனக்கு மரணக்குழி!

பெற்ற பிள்ளை
பித்துப் பாசத்தில்
உரிமைகள் பறிகொடுத்தலில்
கட்டப்படுகிறது
முதியோர் இல்லங்கள் !

அன்பு கருணை
போர்வை போர்த்திய
அரசியலால்
கல்லறை கட்டப்பட்டது
வேலு நாச்சியாருக்கும்
ஜாண்சி ராணி்க்கும்

பெண்ணே !
ஆணாதிக்க வாதத்தால்
ஆதரவு கரம் பேசி
பறிக்கப்படுகிறது
உன் பெண்மை !

நாகரீக முற்போக்கு பேசி
மேனாட்டு அரைகுறை
மோகத்தி்ல் வீழ்த்தப்பட்டு
இரசிக்கப்படுகிறது
உன் பெண்மை !

"வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார் ஒரு முறை"
வீர வசனத்தில்
உன் இளமை
உற்சாக உணர்ச்சியேற்றி
தகர்க்கப்படுகிறது
உன் வாழ்க்கை !

பெண் மீது கொண்ட
பொறாமையில் உனை
சொந்தமாக்கத் துடித்து
சுத்திவரும் ஆண்மை
காதல் சொல்லி
வீழ்த்தப்படுகிறது
உன் பெண்மை !

ஒருமுறை வீழ்ந்தால்
வீழ்ந்தே கிடப்பதால்
தெரிந்தே நசுக்கப்படுகிறது
பெண்மை !

வீழ்ந்தே கிடப்பது
அழகல்ல உனக்கு
பெண் புலியாக எழுந்திரு !

பெண்மையை இழந்து
ஆணாகக் கேட்கும்
சம உரிமை மூடத்தை
தூக்கி எறி !
உலகம் சம படைப்பெனச்
சொல்லி அடி !

"பெண் போகப் பொருளா?"
கேட்கும் முன்
போதையில் போகமாகும்
பெண்களை ஒழி !
பெண்மை மேன்படும் !

ஆணுக்கு நிகர் கேடுகளை
செய்வதில் நிறுவப்படுவதில்லை
"ஆணுக்கு பெண் சளைத்தவரா?"
ஆணவப் பேச்சு !
ஆணும் செய்யாத சாதனைகளை
சாதிப்பதில் இருக்கிறது
பெண்மையின் உன்னதம் !

சாதனை தொட்டுவிடும்
தூரம் தான் !
சோகத்தை சொர்க்கம் ஆக்க
சோதனையில் சோரம் போகாது
சீறி எழுந்திரு
சாதனைப் பெண்ணே !
சீறி எழுந்திரு !

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

9.6
Your rating: None Average: 9.6 (10 votes)

கருத்துகள்

dharshi's படம்

நல்லா இருக்கு


நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நல்ல கவிதை. யாரோ


நல்ல கவிதை.
யாரோ சொன்னாங்க....
பெண் தான் சுதந்திரம் அடைவதாய் நினைத்துக் கொண்டு தனக்குறிய அடையாளங்களை இழக்கிறாள்.


சந்துரு


ranjitsachin's படம்

nice..


Vijayakumar's படம்

அருமை நன்பா


அருமை நன்பா


புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்


vinoth's படம்

அனைவருக்கும் நன்றிகள்


அனைவருக்கும் நன்றிகள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...