முடிந்தவனின் மூடு பல்லாக்கு
முன்சென்று முடிந்த சாலையில்
என் கால்கள் கடந்த
நெருடல் நிமிடங்களில்
நினைத்து பார்க்கிறேன்
அணைந்து போனவனின் வாழ்க்கையை..;
பிறந்ததும் பிள்ளையை
தொட்டிலில் கிடத்தி
புதிதாய் பூத்த
"பூ"வென்கிறான்;
பருவத்தில் பெண்ணுக்கு
பலவித அழகு
"பூ" சூட்டுறான்;
பசுங்கன்னிக்கு பக்குவமாய்
பதமாய் காதலை சொல்லி
"பூ" கொடுக்கிறான்
அவள் கூந்தல் உதிரும்
"பூ"வை தாங்கி பிடிக்கிறான்;
இதை பார்க்கும் ஊரான்
புரம் பேசி
"பூ" "தூ" வென
ஓரம் துப்புறான்;
ஆனந்த திருமணத்தில்
ஆசிர்வதிக்க அள்ளி
"பூ" "தூ"வுறான்
"பூ" "தூ" ஊரான்;
அந்த ராத்திரியிலும்
அங்கங்கள் புரளும்
கட்டிலை மறைக்கும்படி
அங்கேயும்
"பூ" தூவுறான்;
அடுத்தவனை ஏமாற்ற
அருமையாய் திட்டம் போட்டு
காதில்
"பூ" சுத்துரான்;
ஆடி அடங்கி
அந்த நாட்டுக்கு குடியேற
போகையிலும்
போகும் வழியெல்லாம்
"பூ" "தூ"வுரான்
"பூ" "தூ" ஊரான்;
"இது ஆடியடங்கும் வாழ்க்கையடா...."
கருத்துகள்
அ முதல் அக்கு வரை.... "இது
அ முதல் அக்கு வரை....
"இது ஆடியடங்கும் வாழ்க்கையடா...." 
நட்புடன்
குமார்
நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
"இது ஆடியடங்கும்
"இது ஆடியடங்கும் வாழ்க்கையடா...."
பூ தூ ......... கலக்கல்
பூ தூ .........
கலக்கல்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...












