Ponvannan's படம்

பூமியில் பிறந்து வாடா
புண்ணியம் செய்து வாடா
பொருளையே கொடுத்து வாடா
புகழையே சேர்த்து வாடா

வாடாத மலரைச் சொரிந்து
பாடாத பாட்டைப் பாடி
தேடாத பதத்தில் விழுந்து
கோடாத மனமே பெற்று வாடா

பெற்றவர்தம் நிழலில் வாழ்ந்து
உற்றவர்தம் உறவில் மிளிர்ந்து
கற்றவர் தம் அறிவைப் பெற்று
நற்றவத்தவர் வழியில் நிற்பாயடா

நடப்பதும் நிற்பதும் அவன் செயல்தானடா
கிடப்பதும் அலைவதும் சிவனருளேயடா
கொடுப்பதும் கொள்வதும் உன்கையில்தானடா
எடுப்பதும் விடுப்பதும் உன்திறனிலேயடா

மானிடப் பிறவி எடுத்தாய் நீயடா
மாணிக்கமாய் ஒளிர்ந்திடுவாய் இனியடா
மாபெரும் மனிதரைப் போல் தானடா
மாண்புடனே வாழ்ந்து நிற்பாய் பாரடா

பூமியில் ஒரேமுறைதான் காலடி நீ வைப்பாய்
பூவொன்று ஒரே நாளில் தன் வாழ்வை நன்றாய்
மணம்பரப்பி முடித்துக் கொள்ளுமாப் போலே-தமிழ்
மணம் பரப்ப நீயும் மனங் கொள்ளுவாயடா

எத்தனை மொழிகள் கற்றாலும் நீ
எத்தனை நண்பர்கள் பெற்றாலும்
தமிழ் மொழி காட்டும் பண்பினையே
தரணியில் வேறெங்கும் காணாயடா

எனவே பூமியில் பிறந்து வாடா
தமிழனாய் நடந்து வாடா
பொறுமையை பெருக்கி நாளும்
பெருமையைப் போற்றி வாடா

6.42857
Your rating: None Average: 6.4 (7 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"பொறுமையைப் பெருக்கி


7

"பொறுமையைப் பெருக்கி நாளும்
பெருமையைப் போற்றி வாடா" என
பொன்வண்ணன் அழைப்பது சரிதான்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

"அடா"வென அயராது சொல்லி வாடா


7

"அடா"வென அயராது சொல்லி
வாடா மலரென ஓர்க்கவிதை
அர்த்தம் பொதிந்த சிந்தனை
படிப்போரும் விடா முயற்சி கொள்வார்

அடடா அருமையானக் கவிதையடா
விடையேறும் விமலரும் பாராட்ட
ஆனந்த தாண்டவம் அனைவரும் ஆட‌
வின்னதிர விளம்பிய சொல் வாழ்கவே!

vinoth's படம்

எனவே பூமியில் பிறந்து


5

எனவே பூமியில் பிறந்து வாடா
தமிழனாய் நடந்து வாடா
பொறுமையை பெருக்கி நாளும்
பெருமையைப் போற்றி வாடா
Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ponvannan's படம்

பாராட்டிய அனைவருக்கும் என்


பாராட்டிய அனைவருக்கும் என் நன்றி

டணிஸ்கரன்'s படம்

தாங்கள் என்னைக் கூப்பிடுவது


9

தாங்கள் என்னைக் கூப்பிடுவது போல இருந்தது. அருமை அருமை. தாங்களின் நட்பால் எனக்கு பெருமை பெருமை.

Ponvannan's படம்

உங்களின் நட்பால் எனக்கும்


உங்களின் நட்பால் எனக்கும் பெருமைதான். நன்றி