Skip to main content

பூமித்தாய் பொங்கி எழுகிறாள்

URI: http://tamilnanbargal.com/node/41415
கருத்துகள்: 5Likes: 0141 views

பூமித்தாய் பொங்கி எழுகிறாள்

padmabharad's படம்

பூமித்தாய் பொங்கி எழுகிறாள்

பல நாள் சினம், ஒரு நாள் வெளி வரும்
பூமித்தயே, இது தானோ உன் செய்கைக்குக்காரணம்?
பாதாள மேடையில் நீ ஆடிய ஆட்டம்
கடல் அரசனை பலமாக உலுப்பியது போலும்
கடல் சீற்றம் கட்டுக்கு அடங்கவில்லை
அதன் விளைவுகள் அளவுக்கு அடங்கவில்லை
மானிடர், மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள்
வீடு வாசல்கள், நில புலன்கள்
அத்துணையும் படு சேதம், ஈடுகட்ட முடியா துக்கம்
ஏனிந்த கொடுமை?எவர் அளிப்பார் இதற்கு விளக்கம்?
எப்பிறவியின் கர்ம வினையோ, இப்பிறவியில் பழிவாங்குகிறது
இந்த வேதாந்தம், இதம் தருமா எமக்கு?
வேறு காரணங்கள் உண்டோ இந்த வேதனைக்கு?
யோசித்துப்பார்க்கிறேன், சரிதானா என் கணக்கு?
பிஞ்சுக் குழந்தைகளை படுத்தும் பாவி மனிதர்கள்
உன் பிள்ளைப்பாசம் பெரும் அலையாக பொங்கியதோ?
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மேலும் அராசகம்
கொந்தளித்த உன் மனம் தான் கடல் தனை கொப்பளித்ததோ?
மரங்களை வெட்டி வீழ்த்தி இயற்கையை செயற்க்கையாக்க முயலும் மூடர்கள்
இவர்க்கெல்லாம் புத்திமதி புகட்டும் வண்ணம் நீ குமுறினாயோ?
குறுக்கு வழியில் கோடீஸ்வ்ரராக,பொன்னான இப்புவியை குப்பையாக்கும் கும்பல்கள்
அப்பேய்களை மிரட்டியடிக்க உன் பொற்பாதங்களை ஓங்கி அடித்தாயோ? அதனால் தான் நில நடுக்கமோ?
காரணங்கள் யாதோ, நான் ஏதுமறியேன்
கடல் சீற்றத்தால் உண்டான சிதைவுகளை தினம் தினம் காண்கிறேன்
வினவத்தான் முடியும் என்னால், சராசரி மனிதப்பிறவி நான்
விளக்கம் கூறு தாயே, உன்னைத்தான் நம்பியுள்ளேன் நான்

தாமரைச்செல்வி

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

நன்று!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நன்று!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்