புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
போக்கில் வேண்டும் மாற்றங்களே
நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
நீங்கிட வேண்டும் வேற்றுமையே
வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
வடித்திட காரணம் பொறுத்திடுக
நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
நிச்சியம் ஈழம் பெறுவீரே
இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
எதையும் பெரிது பண்ணாதீர்
புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
போரினை தொடங்குவீர் நீரின்றே
அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள
ஆணவ நாய்களின் வாலாட்டம்
எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
எதிர் வரும் காலம் காண்பிக்கும்
வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
வாழ்வில் வீசிய புய லாலே
தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
தங்கிப் பலரே அங்கங் கும்
பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
பட்டம் பதவி சூழ் கின்றீர
நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
நினைவால் வாரா துயர் மூளும்
பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
பிரிந்த உறவை மறப் பீரா
திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
தேம்பும் மக்களை மறப்பீரா
இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
ஈழம் காண முனைந் திடுவீர்
சிறந்த முடிவை எடுப் பீரே-என
செப்பினேன் வேண்டி முடிப் பீரே
புலவர் சா இராமாநுசம்
கருத்துகள்
காலத்திற்கு தேவையான உண்மையான
காலத்திற்கு தேவையான உண்மையான நடைமுறைகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் தங்கள் கவிதை மிகமிக அவசியமானதொன்று. தமிழன். கொடிகள்
தலைநிமிர்ந்து பறந்து, பல நாடுகள் தமிழனின் ஆட்சிகண்டு இறுமாப்புடன் இருக்க வேண்டிய இன்றைய நாளில், எந்த ஒரு நாடும் இல்லாமலே அவமானப்பட்டு திரிவதற்கு காரணம் இந்த ஒற்றுமை இன்மையே.
இவ்வளவு துயரங்களுக்கு மத்தியில் புலம் பெயர்ந்துவந்தும், இங்கும் இலகுவாக காசுக்கு விலைபோவதும் எதிரியின் கைக்கூலிகளாக மானமிழந்து மாறுவதும்
குலத்தை வெட்டும் கோடரிக்காம்பாக மாறுவதும் இந்த நிலக்கு காரணம்.
அன்று கட்டப்பொம்மன் ஆட்சியில் ஒரு எட்டப்பன் இருந்தான். இன்று ஒரு எட்டப்பனுக்குப்பதிலாக நூறு எட்டப்பன் உள்ளனர்.
எப்படி ஐயா விடுதலை வரும். மீண்டும் மீண்டும் தேசம் எரிவதுதான் விதியோ?
தங்கள் கருத்தை முழுமையாக
தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
இரத்தம் கொதிக்கிறது ஐயா
இரத்தம் கொதிக்கிறது ஐயா புலவர் சா இராமாநுசம் ஐயா அவர்களுக்கும் யாழ்பாவணன் அவர்களுக்கும் எழுதிக்கொள்வது, இங்குள்ள நிலைமையை எண்ணி.......! நாளும் பொழுதுமாக துரோகக் கும்பல் வளர்ந்துகொண்டிருக்க,
தமிழின் சத்தியத்தைக் காப்பவர், இடுப்பில் அணிந்திருக்கும் துணிகூட அவிழ்ந்து விழுந்தது உணராமல், எதிரியின் பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்களின் செயலைப் பார்த்தால், `ஈழம் என்னும் கோவில் தீயில் எரிகிறது,. முடிந்ததை எமக்கென்று பிடுங்கிக் கொள்வோம்` என்பதுபோல் ஆதாயத்தை தேடிக்கொள்கிறார்கள்.
எங்கும் எதிலும் எதிரியின் பணம் கட்டுக்கட்டாக வந்துவிழுந்து தேடித்தேடி ஆட்களை விலைக்கு வாங்கி மிகச் சாதுர்யமாக வஞ்சனை வலைவிரித்து
தற்போதைய தலையிடியாக இருக்கும் புலம் பெயர் மக்களின் சுதந்திர தாகத்தை ஒடுக்க பெரிய வலைப்பின்னலே, முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
உளவு துறையினர் உதவியுடன் வெளிநாட்டு தூதரகங்களின் உதவியுடனும்
மிக தந்திரமாக நடக்கும் இந்த இரகசியப் போர் தீவிரமாக யாருக்கும் தெரியாத
ஐந்தாம் கட்ட ஈழத்தவருக்கு எதிரான போராக மும்முரமாக மாற்றப்பட்டுள்ளது
கவிதை எழுதி போடுவதற்கு மனமே வரவில்லை.பாரதியின் பாடலைதான்
போட மனம் விழைகிறது
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
தனியாக கவிதை எழுத மனம் வரவில்லைப் புலவர் ஐயா!
இந்த யுகம் மட்டுமல்ல எத்தனை யுகங்கள் கழிந்தாலும் ஈழத்தமிழன் தன்னை காப்பாற்றிக் கொள்ளுவானா என்பது கேள்விக்குறியே!
பிற்சேர்ப்பு:
மாவீரர் நினைவுநாள் என்று ஒன்றாக இணைந்து எடுக்கும் நினைவு வணக்கத்தைக்கூட குழப்பச் சதி தீவிரமாக நடக்கிறதாம். பிளவு படுகிறது ஒற்றுமை! இரண்டாகிவிட்டது கூட்டம்






