கண்டெடுத்த செல்வத்தை
தொலைத்திருக்கிறீர்களா?
என் செல்வம் நட்பு...
நட்பெனும் பாத்திரம்
நொருங்கியப் பின் அதை
அள்ளி என்ன பயன்?
மனக்கை புண்ணாகி விடும்..
சினேகம் ஒன்று போதும்
இருவர் வாழ்வை ஒன்றாக்க!
துரோகம் ஒன்று போதும்
ஒருவர் வாழ்வை இரண்டாக்க!
உன்னோடு நான் பேசிய ஒவ்வொரு
நொடியும் என்னை நோகடிக்கிறது!
என் நட்பை திரை போட்டு மறைக்கிறேன்
ஆனால், உன் புகைப்படத்தை
என் கணினித்திரையில்
வைக்கிறேன்..!
உன் நட்பு எனக்கு
குப்பையில் பூத்த
ரோஜாச்செடி போல...
நீ அன்பால் என் இடத்தை
கவர யுகங்களேனும்
குப்பையாய் கிடக்க
விருப்பம் தான்!
உன் எண்ணங்களே
என்றும் என் செயல்களாய்
பிரதிபலிக்கும்..
உன் தன்னடக்கத்தை
வைத்து ஒரு காவியமே
படைக்கலாம்!
நான் நட்பு எனும்
சொல்லை வாசிக்கும் போது
உன்னையே சுவாசிக்கிறேன்!
நீ என்னோடு பழகிய
நாட்கள் சொற்பம்தான்!
ஆனால் அவையே
எனக்கு சொர்க்கம்..
என் அன்பை விழக்க
வார்த்தை தேவையில்லை
மெளனமே போதும் பெண்ணே!
என் நட்பையும் விளக்க
வேண்டிய அவசியம் உண்டு!
சோகத்தின் போது
தோள் தந்தவள் நீ!
சந்தேகத்தால் மீண்டும்
எனை சோகத்தில்
ஆழ்த்திவிட்டாய்!
பூக்கள் பல பூத்து
கனிகள் பல குலுங்கும்
மரத்தைக் கண்ட
பறவை அதை வசிப்பிடம்
ஆக்கியது...
மரமோ மகிழ்ச்சியில்
எல்லையை அடைந்தது..
கனிகளை வாரி இறைத்தது
அள்ளி அளித்தது..
பறவை அதை அழகாய்
கொத்தி உண்பதைக் கண்ட
மரம் சந்தோஷத்தில்
தன் கிளைகளை அசைத்து
அசைத்து பறவை அமர்ந்திருக்க
ஊஞ்சலானது..
அதன் காலம் முடியவேண்டுமே!
கிளைகள் வெட்டப்பட்டன..
வெருமரமாய் ஆனது..
வெறுமை அற்றுபோனது...
பறவை வேறு
இருப்பிடம் நோக்கி செல்ல
மரம் அழுதது...
கிளைகள் வெட்டப்பட்ட
நிலையில் கூட கவலை
அடையா மரம்
தன் சினேகம் பிரியும் போது
கண்ணீர் சிந்திற்று!
இன்று நானும் பலிச்சொல்லால்
வெட்டப்பட்டுவிட்டேன்!
என் நல்லவையெல்லாம்
வெட்டப்பட்டன!இன்று
நான் குப்பைக்குவியல்...
உன் அருகே இருப்பதைவிட
உன் மறைவு நட்புக்காக
புரிந்துகொண்டு பிரிந்திருப்பதே மேல்!
எங்கோ பிறந்த வளர்ந்த நீ!
எனக்கு தோழியானதேன்?
எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம்
என் தாயாகவும்
தந்தையாகவும்
தமக்கையாகவும்
இவ்வாரு பல உறவுகளாய்
உருவெடுக்கதான்!
எனினும் நான்
புரிந்துகொண்டு பிரிந்திருப்பதே மேல்!
கருத்துகள்
சினேகம் ஒன்று போதும் இருவர்
சினேகம் ஒன்று போதும்
இருவர் வாழ்வை ஒன்றாக்க!
துரோகம் ஒன்று போதும்
ஒருவர் வாழ்வை இரண்டாக்க!
அனுபவமிக்க வரிகள். நட்பு உடைந்தால் அதனால் ஏற்படும் வேதனையும் வலியும் இந்தக் கவிதையில் இழையோடுகிறது. இலவசமாகக் கிடைக்கும் காலம் எனும் மருந்து பிரிவினால் ஏற்பட்ட வேதனையையும் வலியையும் மாற்றக் கூடிய சக்தி உடையது. காத்திருந்தால்... வேதனை தீரும். அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
வணக்கம் தோழியே, மிகவும்
வணக்கம் தோழியே,
மிகவும் அருமையான கவிதை...... படித்து முடிக்கும் போது நட்பின் பிரிவு ஏனோ மனதில் கனக்கின்றது....... வரிகளில் உணர்வுகளை, மனதின் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்.......மேலும் நட்பின் புனிதத்தையும் உயர்த்தியுள்ளீர்....
"நான் நட்பு எனும்
சொல்லை வாசிக்கும் போது
உன்னையே சுவாசிக்கிறேன்!"
நட்பின் இழப்பை அருமையாக பதிந்துள்ளீர்...... உவமையோடு....
"கிளைகள் வெட்டப்பட்ட
நிலையில் கூட கவலை
அடையா மரம்
தன் சினேகம் பிரியும் போது
கண்ணீர் சிந்திற்று!"

உள்ளம் எனும் ஆற்றில் இருந்து
உள்ளம் எனும் ஆற்றில் இருந்து ஊற்றெடுத்த உங்கள் கவிதை எனும் அருவி இன்னும் பரவட்டும்.......
எனக்கு மட்டும் தெரிந்த
எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம்
என் தாயாகவும்
தந்தையாகவும்
தமக்கையாகவும்
இவ்வாரு பல உறவுகளாய்
உருவெடுக்கதான்!
எனினும் நான்
புரிந்துகொண்டு பிரிந்திருப்பதே மேல்!














