அடடா.....
அப்பேர்பட்ட அழகனா அவன்
எங்கவூர் நாய்களுக்கெல்லாம்
எத்தனையுக காதலோ................?
எத்தனையோ முறை
துரத்துகின்றனவே.........!
எதையும் கவனியாமல்
நடக்கிறான் _அவன்
என்னதான் நினைதானோ..........?!
எதற்கிந்த சிரிப்பு............!?!
என்றோ ஒரு நாள்
இவன் இன்ப அதிர்சிகொடுத்த
இவனின் அவளளித்த
இன்னொரு அதிர்ச்சியில்
இன்னமும் சிரிக்கிறான்
இன்னதென்று சொல்லாமலே......
அவனின் அவளது நினைவுகளில்
அழுக்கு படிந்ததால்
சேகைகுள் சிறையானதோ.......?!?
தலைமுடியியும் தலைவிதியும்
அந்தசட்டை அவள் கிழித்த
நெஞ்சத்தின் பிரதி நிதியா................?
ஒப்புக்காய் காதலித்த சண்டாளி
ஒரு நாளாவது காணாளோ..........?!
அவிழ்ந்த கால்சட்டையிலிருந்து
ஆடிய அவன் குறி கண்டு
யாரோ கட்டிவிட்ட
எட்டுமுழ காவிதுணி
இன்னுமும் இருக்கிறது
அவனுக்கு துணையாய்....
சட்டைபை சில்லரைகள் தாளமிட
சங்கீதம் படிக்கும் அவன் பாட்டில்
எங்களூர் இரவுகூட
தனைமறந்து தூங்குகிறது
எதிர் பாட்டு பாடி
அலுத்துவிட்டன நாய்களும்
ஆனாலும் நிருத்தவில்லை
அவனிடம் அவை
காதல் சொல்வதை மட்டும்.... 
கருத்துகள்
"சட்டைபை சில்லரைகள்
"சட்டைபை சில்லரைகள் தாளமிட
சங்கீதம் படிக்கும் அவன் பாட்டில்
எங்களூர் இரவுகூட
தனைமறந்து தூங்குகிறது
எதிர் பாட்டு பாடி"
யார் பித்துக்குளி?
















