yarlpavanan's படம்

பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டு

மங்கலம், அமங்கலம் என்பது
தமிழ் கூறும் இலக்கணம்
என்னவென்று தெரியுமா?
ஒருவர் செத்துப் போனால்
'செத்துப் போனார்' என்றுரைக்காமலே
'காலமாகி விட்டார்' என்றழைப்பது
மங்கலம் ஆகுமாம்!
ஒருவர் திருமணம் செய்தால்
'நல்ல துணையைக் கைப்பிடித்தார்' என்றுரைக்காமலே
'சனியனைப் பிடிச்சிட்டார்
இனிச் சீரழியப் போகிறார்' என்றழைப்பது
அமங்கலம் ஆகுமாம்!
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டோ
இவ்விரண்டையும் இணைத்தே
கூடற் சுவை(அங்கதச் சுவை)
சொட்டப் பாபுனைவதே!
ஒருவரை
புகழ்வது போல இகழ்வதும்
இகழ்வது போல புகழ்வதும்
கூடற் சுவை(அங்கதச் சுவை) என்றறிவோம்!
எடுத்துக் காட்டாக
"வாருங்கள் மது அருந்தலாம்
போதை தலைக் கேறினால்
நிர்வாணமாய் நடைபோடலாம்!" என
புகழ்வது போல இகழலாமே!
எடுத்துக் காட்டாக
"பண்ணையாருக்குப் பெருஞ்சோர்வு(நட்டம்)
கையிருப்பைக் கிள்ளி விசுக்கிறார்
ஊரெல்லாம் பசியாறுகிறது!" என
இகழ்வது போல புகழலாமே!
படிப்பவர் மூளைக்கு வேலை கொடுக்கும்
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டைக் கையாண்டு
பா புனைவோம் வாருங்கள்!

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

(No subject)


5

Clap Clap Clap

yarlpavanan's படம்

மிக்க நன்றி.


மிக்க நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

'"வாருங்கள் மது


5

'"வாருங்கள் மது அருந்தலாம்
போதை தலைக் கேறினால்
நிர்வாணமாய் நடைபோடலாம்!" என
புகழ்வது போல இகழலாமே!'

ஹாஹா,
குடிகாரர்களே இவ்வாறு மற்ற குடிகாரர்களை கூப்பிடுவதுண்டு.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

குடிகாரர்கள் மற்றக்


குடிகாரர்கள் மற்றக் குடிகாரர்களை 'வாருங்கள் மது அருந்தலாம்' என்று கூப்பிட்டாலும் "போதை தலைக் கேறினால்
நிர்வாணமாய் நடைபோடலாம்!" என்று சொல்லியிருக்க மாட்டார்களே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


yarlpavanan's படம்

எனது முகநூல்(Facebook) நண்பர்


5

எனது முகநூல்(Facebook) நண்பர் Siva Shan "மங்களம்", "அமங்களம்" என்பன தவறு என்றும் அவை "மங்கலம்", "அமங்கலம்" என்றே வரவேண்டும் என என் தவறைச் சுட்டினார். அதற்கு "
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D நான் கற்ற போது மங்களம், அமங்களம் எனப் படித்தேன். தங்கள் கருத்துச் சரி. அதற்குச் சான்று கூறும் இணைப்பும் தந்துள்ளேன். தவறைச் சுட்டியதற்கு நன்றி." எனப் பதிலளித்துள்ளேன். தவறுக்கு மன்னிக்கவும். பதிவில் தவறைத் திருத்தியுள்ளேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil