அங்கே...... என்ன விழாவா...?
மும்புரமாய்; முதற் சுற்று
பம்பரமாய்; ரொம்ப நேரமாய்
என்ன செய்கிறார்கள்....?
அடடே............
எட்டுகாலன்கள் எத்தன்னையோ பேர்
வாயாலே நூலெடுத்து; வாசமில்லா பூதொடுத்து
தொங்க விட்டார்கள் தோரணமாய்...
மூலைமுடுக்கெல்லாம் மாலைகளை...
எட்டிபார்த்த எலிகூட்டம்
புழுக்கையை கொட்டி;
புகைய விட்டு;
அழுக்கு கூடத்துக்கு
அத்தர் ஆக்கின...
பூத்த கருவேலஞ் செண்டுகள்
ஆலங்கன்னு மாடத்தின் கீழ்
அசதியில் ஓய்வெடுத்தன;
காட்டு கொடிகள் கழகம்
கோட்டைக்கு சேலைகட்டி அழகு பார்த்தது
மூச்சில் கட்டளையிட்டு
எல்லோரையும் படம்பிடித்தான்;
நாகன்;நல்லவன்.
செல் ஒரு புரம்
சுவற்றை சுரண்ட;
கரையான் மண்ணெடுத்து
புற்றுகட்டி பூசுவேலை பார்த்தான்
வவ்வால் வாசிப்பில்
வந்த இசைநதியில்
காதுகள் கதவடைத்து கொண்டன;
புழுக்கை நெடி; ஏரிய நொடி;
புறந்தள்ளி வெளிவந்தேன்;
விழாவீடு;
வெள்ளையடிக்கபடததை கண்டு;
வெதும்பினேன்;விவரம் அறிந்தேன்;
இடைத்தேர்தல், பொதுதேர்தல்
நடக்கவில்லையென;
பார்ப்பவர்களுக்கெல்லாம் அது
அரசன் இருந்த அரண்மனை;
பைத்தியகாரர்கள்
ஒருவனும் உணர்வதில்லை_அவை
"நம் தாத்தாக்களின் கைவினை"
தூசிதட்டி பூசி பார்
கைவினை தாத்தன்கள்
வீணை பாட;
தெம்மாங்கு இசைப்பார்கள்... 
கருத்துகள்
"வவ்வால் வாசிப்பில் வந்த
"வவ்வால் வாசிப்பில்
வந்த இசைநதியில்
காதுகள் கதவடைத்து கொண்டன" எனும் வரி என் உள்ளத்தை மிகவும் கவர்ந்து விட்டது. வவ்வால் எழுப்பும் ஓசையை நம்மால் கேட்கவே முடியாது. அப்படியிருப்பினும் அதன் வாசிப்பில் வெளியான இசைப்பிரவாகம் நம் காதுகளை அடைத்துவிட்டனவாம். அடடா! என்னே ஒரு உருவகம். ஐயா கவிஞரே...வாழ்த்துகிறேன். இன்னும் பல சிறப்பான் கவிதைகளைக் கிறுக்குங்கள்...தமிழ் படித்தவர்கள்...கிறங்கிப் போகட்டும்.
நண்பரே அரோ எப்படி ஐயா உம்மால்
நண்பரே அரோ எப்படி ஐயா உம்மால் இப்படி நையான்டித் தனமாகக் கவிதை எழுதத் தோன்றுகின்றது! அருமை அரோ! எனது பாராட்டுக்கள்!

நல்ல பாடு பொருள். வாழ்த்துகள்
நல்ல பாடு பொருள்.
வாழ்த்துகள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஒரு நிகழ்வு சிறப்பாக படம்
ஒரு நிகழ்வு சிறப்பாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளது.
சிறப்பாக உள்ளது.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









