syedali's படம்

பால்ய நட்பு

பள்ளி மதிலுக்குள்
முதல் சந்திப்பில்
தளிரிட்ட உறவு
ஊர்த்தெருக்களில்
நித்தமும் துடர்ந்த
விளையாட்டு தருணங்கள்
கூட்டளியைத் தேடிய
வீட்டு தரிசனம்
இவன் என் சேக்காளி
உறவுகளிடம் அறிமுகம்
வரவுகள் தொடர்ந்த
இரு வாசல்கள்
நல்லுறவை பிணைத்தது
பால்ய நாட்களில்
நித்திரைகளில் மட்டும்
தனிமைகளின் வரவுகள்
உறவுகளின் நிகழ்ச்சிகளில்
உரிமைப் பங்கெடுப்பு
சின்னசின்ன சண்டைகள்
உறவுகளின் சமரசம்
பட்டியலில் அடங்காத
வரவும் செலவும்
காலத்தின் ஓட்டம்
தூரப் பயணங்கள்
கடித இணைப்பு
வருஷங்களின் இடைவெளி
ஓர் இரு சந்திப்பு
வரம்பற்ற கும்மாளத்துடன்
சுற்றித்திரிந்த நாட்கள்
மனப் புத்தகத்தில்
அழகிய குறிப்பு
நாட்களை தின்ற
வாழ்க்கை பயணம்
கடந்து செற்றது
விசித்திர முகங்கள்
பக்குவ பெட்டியில்
அனுபவங்களின் சேகரிப்பு
சிறிது சிறுதாக அகன்று
பிரித்தக் காட்டியது
நட்பையும் காதலையும்
பெண்மையின் வரவு
புதிய துணை
மணப்பந்தல் வழி
குடும்ப பயணம்
உழைப்பைத் தேடியும்
உறவை பேணியும்
நிற்காத ஓட்டம்
இளைப்பாறும் தருணம்
அவ்வப்போது வந்துபோகும்
பால்ய நட்பின் நினைவுகள்

6.25
Your rating: None Average: 6.3 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்

சிறப்பாக உள்ளது பால்ய கால


6

சிறப்பாக உள்ளது பால்ய கால நினைவுகள்..

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


smariappan's படம்

சூப்பராக உள்ளது...


4

சூப்பராக உள்ளது... Clap Clap Clap


mari


nandhalala's படம்

(No subject)


8

Clap Clap


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


syedali's படம்

தோழர்களின் கருத்திற்கு என்


7

தோழர்களின் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்

என்றும் தோழமையுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....