என் காமம் பாரதி மீது
கோபம் வேண்டாம்!
ரதி மீது காமன் ஆசைப்பட்டான்
அது உடல் காமம்!
நான் கொண்ட காமமோ
பாரதியின் பாக்களின் மீது!
வீரக்கவி முக்காலமும் உணர்ந்தவன்
சொற்களால் சுன்டியிழுத்தான்!
கட்டியனைத்து முத்தம் பொழிய
ஆசை பா ரதியிடம்!
பா இயற்றுவதில் அவனொரு
கவித்தாய் கரு வளர்த்தான்!
அவனது முறுக்கிவிட்ட மீசை
மோக முள்ளாய் எனக்கு மட்டும்!
அவன் தலைப்பாகை பாங்கு
அவன் மட்டும் அரசனாம் கவிதைக்கு!
என் காதலன் கவியில் கண்ணாளன்
விடைகளுக்கு அவனொரு வேங்கை!
அவன் கைவிரல் தொட்டு வருட ஆசை
அவ்விரல்களில் முத்தங்கள் பொழிய ஆசை!
அவனிருந்தால் என் அவஸ்தை அறிந்து
ஆரத்தழுவி அரங்கேற்றம் செய்திருப்பான்!
கண்ணம்மா தடை போட்டாலும் விடமாட்டான்
சொல்லம்பு வீசி சிரித்திருப்பான்!
அழகிய கண்களும் அதிசய பா தான்
அவனுடைய பா காமத்தில் நான்!
பிள்ளைவரம் கேட்டு தவமிருந்திருப்பேன்
பா வொன்று கருவாக பெற்றிருப்பேன்!
என் காதலன் குயில் பாட்டாய் வந்து
கன்னத்தில் முத்தமும் காதினில் தேனாக!
என்னவென நான் சொல்ல ஏகாந்த சுமையெனக்கு
பா சுமந்த பா ரதி என்னருகிலில்லையே!
கனவாகிப் போனதனால் காலையில்
கண்விழித்து பார்க்கையில் ஏக்கம் தான்!
என்றும்:-சுஷ்ருவா
கருத்துகள்
பாரதி அவன் மீசை கண்டு ஜாதி
பாரதி
அவன் மீசை கண்டு ஜாதி வெறி பின்னாலடித்து ஓடிற்று
அவன் கண்ணின் தீர்க்கத்தில் சுதந்திரத்தீ கொழுந்துவிட்டெரிந்தது
அவன் சொல்லின் வாளில் பெண்ணடிமை அறுந்தது வீழ்ந்தது
அவன் முண்டாசில் முத்தமிழும் வந்தொடுங்கியது
அவன் துடிப்பு கண்டு தமிழன்னை வாரியணைத்துக் கொண்டாள்
இனியவன் முகம் இனி ஒவ்வொரு கவிஞனிலும் வந்து சேர்க்கிறார் தமிழ்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வணக்கம் சகல கவிதை
வணக்கம் சகல
கவிதை நல்லாருக்கு

(தப்பா எடுத்து கொள்ள வேண்டாம் நானும் பா ரதியின் காதலன் என்பதால் அந்த உறவு சொல்லி அழைத்தேன்)
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
பாரதி கண்ட கனவில் சுஷ்ருவா
பாரதி கண்ட கனவில் சுஷ்ருவா இருந்திருக்கலாம். அதனால் சுஷ்ருவா கண்ட கனவில் பாரதி இருப்பதை அவரது கவிதை மூலம் நம்மால் அறிய முடிகின்றது.
நல்ல கனவு... நல்ல கவிதை.













