பணம்
============
இருந்தால் தூக்கமில்லை
இல்லாவிட்டால் சொந்தமில்லை
இரண்டும் இல்லாமல்
இளமையை தொலைத்து
சேர்த்து அனுப்பியும்
தேவையில் பூர்த்தியில்லை...
தேவைகள் துரத்த
தேடல்கள் தொடர
காலம் நொடிகளை
கழித்துவிட்டு
நரைகளை பதிலளிக்க
சாய்வு நாற்காலியில்
சாய்ந்தும்
மகன் இன்று அனுப்பியிருப்பானா?
நினைவுகள் துரத்துகிறது...
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
கருத்துகள்
ஆழ் மனதை தொடுகிறது.
ஆழ் மனதை தொடுகிறது.
சந்துரு
/// காலம்
///
காலம் நொடிகளை
கழித்துவிட்டு
நரைகளை பதிலளிக்க
சாய்வு நாற்காலியில்
சாய்ந்தும்
மகன் இன்று அனுப்பியிருப்பானா?
நினைவுகள் துரத்துகிறது...///
அருமைக் கவிதை 
அன்புடன்
பாலன்
உண்மையை வெளிக்காட்டும்
உண்மையை வெளிக்காட்டும் கண்ணாடியாய் இக்கவிதை..... அருமை நண்பரே
அருமையான கவிதை
அருமையான கவிதை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
ஆகா..அருமையான சிந்தனைகள்
ஆகா..அருமையான சிந்தனைகள் நண்பரே..
மனதிற்கும்,தேவைகளுக்கும்
இல்லை எல்லை..
annaa










