* புல்லின் மீது
கால் படும்போது
அது—
புழுங்குவதும் இல்லை
காலைப்
புண்ணாக்குவதுமில்லை!
* மன உறுதியும்
அதுபோல்
தன்னை இழக்காமலும்
பிறரைப் புண்ணாக்காமலும்
இருத்தல் வேண்டும்!
* புயலின் போது
பெரிய மரங்கள்
படுத்துவிட்டாலும்
புல்லோ —
தன்னை இழக்காமல்
புன்னகை பூக்கிறது!
* சில்லரைக் காசுகள்
சப்தமிடலாம்
ரூபாய் நோட்டுகள்
எப்போதும்
அமைதியின் வடிவாய்!
* நம் வெற்றி
பிறரின் வீழ்ச்சியிலல்ல...
மகிழ்ச்சியில் விளைகிறபோதே
மகத்துவம் பெறுகிறது!
* வேலியிட முடியாத
காற்றும்
தடைசெய்ய முடியாத
வெற்றியும்
சுவாசப் பைக்கு
சுகம் கொடுப்பவை!
* வெற்றியைப்
பகிர்ந்து கொள்ள முடியாது!
என்றாலும்-
அதன் மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ளும்
பக்குவத்தைப் பதியமிட
பயணப்படுவோம்!
— ஆர். வாணி, கோவை
கருத்துகள்
எளிய நடையில் எழுதி
எளிய நடையில் எழுதி இருக்கிறார். எழுதும் எழுத்துக்கள் பாமரனையும் சென்றடையுமாறு எழுதுவதும் கடினமே...
* புயலின் போது பெரிய
* புயலின் போது
பெரிய மரங்கள்
படுத்துவிட்டாலும்
புல்லோ —
தன்னை இழக்காமல்
புன்னகை பூக்கிறது!
*************
எனக்கு பிடித்தமான வரிகள் , என்ன கஸ்டம் வந்தாலும் புன்னைகையுடன் இருக்கவேண்டுமாம் வள்ளுவர்
--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!
நல்ல எளிமையான கருத்துள்ள
நல்ல எளிமையான கருத்துள்ள வரிகள்.






