sentamildasan's படம்

ராசாத்தியே ரோசாப்பூவே
ராக்கால நேரத்திலே நான் பாடயிலே
ராகத்திலே தாளமில்ல வயசுப்புள்ள நீயும்மில்ல....

வறண்ட நிலம் பாலைபோல
வாழ்க்கையும்தான் ஆனதடி
வந்துநீயும் வாக்கப்பட்டா
வாசலிலே தோரணம்டி.......

நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
பாவிப்புள்ள ஏத்துக்கல
பக்கத்தில நாதியில்ல
பட்டதெல்லாம் துன்பந்தான்டி.......

சொக்கதங்கம் உன் பேச்சில்
சொக்கித்தான் போனேனடி
கட்டித்தங்கம் காதலுக்கு
இப்படியும் நேருமோடி........

மதுரக் காத்துவந்து
மனசோடு ஒரசுதடி
மானே உன் நெனப்பயெல்லாம்
நெஞ்சுக்குள்ள கூட்டுதடி
சோகத்த சொல்லிப்புட்டேன்
சுகவாசல் தெறக்குமோடி
சொல்லடி என் சொர்ணக்கிளி............
சொல்லடி என் சொர்ணக்கிளி............
heart

5.54545
Your rating: None Average: 5.5 (11 votes)

கருத்துகள்

vinoth's படம்

கிராமத்து வாசனை தூக்கலா


6

கிராமத்து வாசனை தூக்கலா இருக்கு கலக்கல் Love


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

தன்னானே தன்னதானே தானானே


6

தன்னானே தன்னதானே தானானே தன்னான தானே தன்னே என்னங்க தமிழ் அருமையா இருக்கு! Clap Clap Clap Clap Clap

rajudranjit's படம்

தன்னானே தன்னதானே தானானே


6

தன்னானே தன்னதானே தானானே தன்னான தானே தன்னே என்னங்க தமிழ் அருமையா இருக்கு! Clap Clap Clap Clap Clap

VISWAM's படம்

அருமை


3

அருமை

muthukumarG's படம்

நன்று!


4

நன்று!

aro...'s படம்

தல கலக்குறிங்க...............


5

தல கலக்குறிங்க............... Clap heart Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


nandhini's படம்

very nice


5

very nice


Nandhu


meenavignesh's படம்

அரும்மையா,,,,,,


7

அரும்மையா,,,,,, Clap Clap Clap


மீனா விக்னேஷ்


joshi2010's படம்

வணக்கம் நண்பரே,


7

வணக்கம் நண்பரே,

மிகவும் அருமையான கிராமத்து காதல் பாடல்....... வார்த்தைகளில் கூட கிராமத்தின் மனம்....
"வந்துநீயும் வாக்கப்பட்டா
வாசலிலே தோரணம்டி.........."

வாழ்த்துக்கள்.......... Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com