சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்
ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி
சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்
இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்
ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்
தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்
ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்
நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்
அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி
விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்
உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி
அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்
முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்
அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்
நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்
நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்
அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி
சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்
எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்
வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்
சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்
வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்
நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்
(3 votes)
கருத்துகள்
நல்லா இருக்குங்க ஜனனமும்
Submitted by vinoth on புத, 23/02/2011 - 9:24pm.
நல்லா இருக்குங்க
ஜனனமும் மரணமும்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்லக் கவிதை!கவிதை, கதை போல்
Submitted by rajudranjit on வியாழன், 24/02/2011 - 1:15am.
நல்லக் கவிதை!கவிதை, கதை போல் அமைந்துவிடது, இனி எழுதும்போது கவிதைவரிகளாக கவிதை அமையட்டும்!











