நெருப்புக்குள் தவம்...பாகம் - 1
இது...
கருவறை துவக்கும்
கல்லறை முடிக்கும்
மானுடம் பிழைக்கும்
நெருப்புக்குள் தவம்...
விடுமுறை தவிர்க்கும்
மனத்துறை இயக்கம்
வாழ்வியல் சதுக்கம்
நெருப்புக்குள் தவம்...
கருவறைத்தவம்... ( தன்மை )
அணுக்களை இணைக்கும்
அணுக்களில் சுரக்கும்
உயிர்த்தலின் சுருக்கம்
நெருப்புக்குள் தவம்...
துளிர்த்தலின் இயக்கம்
தொகுத்தது கொடுக்கும்
அடை பட்டு வளர்க்கும்
நெருப்புக்குள் தவம்...
ஐயிரு மாதம்
அனுதினம் இருக்கும்
அன்னையின் உருக்கம்
நெருப்புக்குள் தவம்...
குறுகியே பெருக்கும்
தினம் தினம் நடத்தும்
ஒருமுக பழக்கம்
நெருப்புக்குள் தவம்...
துளிர்த்தலின் வழக்கம்
உடல் உயிர் செதுக்கும்
கருவறை நிறைக்கும்
நெருப்புக்குள் தவம்...
கருத்துகள்
கவிதைக்கு என் பாராட்டுக்கள்!
கவிதைக்கு என் பாராட்டுக்கள்!











