kirikasan's படம்

4. தீர்ப்பு

புன்னகைத் தாள்அவள் பூமலரும் அந்தப்போதை விழிமயக்க
முன்னமிருப்பது பெண்ணாவளோ ஒருமேகத்தின் தேவதையா
என்ன விழைந்தது என்மனதில் அவள் ஏற்றிய தீ எரிந்தே
சின்னதென எழும்வேகம் பரந்திட செய்வதுஎன் திகைத்தேன்

உந்தன் கனவதில் வந்தவன் நானென கூறிய பொன்மகளே
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்கின்னல் விளைத்துவிடு
சிந்தும் உன்புன்னகை பங்கம் இழைத்தவன் கண்களில்நீ புகுநது
தந்துவிடு இவன் தந்தபொருளவை ஒன்றும் குறைவின்றியே

தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும் தொட்டு அளித்துவிடு
பட்டு இதழ்களில் முத்தமிட்டால் நீயும் முத்தம் கொடுத்துவிடு
கட்டியணைத்தை கட்டியணை நீயும் கட்டளையிட்டுவிடு
கொட்டிகுவித்த குற்றமெல்லாம்ப்தில் குற்றமிழைத்துவிடு

உந்தன் மனதினில் காதலை தீயிட்ட காளையிவன்தனுக்கு
சிந்தனையெங்குமே தீயிட்டு காதலின் தீமை உணர்த்திவிடு
சந்தணமேனியில் செய்தகுறும்புகள் அத்தனையு மெழுதி
தந்ததைப்போல தழுவிக்கொடுத்திடு தீரும்கணக்குஅதற்கு

செந்தணல்வீசும் சிலையெனக் கண்டவள் இந்தக்குளிர்நிலவா
சுந்தரம் வீசிடும்பூந்தென்றலா இல்லைச் சுழலும்வன்புயலா
சிந்தும் சினமின்றி சேயிழை கண்களில் சேர்ந்ததுமுத்துக்களா
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பது இன்ப கலக்கத்திலா

செவ்வரியோடிய கண்கள்மயங்கிடச் சற்றுநிமிர்ந்துநின்றாள்
திவ்வியரூபமாய் சுந்தரிபொன்னெழில் தேகமெடுக்க கண்டேன்
கொவ்வைஇதழ்களில் புன்னகை பூத்துக் கொஞ்சமருகில் வந்தாள்
எவ்விதம் உங்கள் கனவில்வருவது ஏழைஅறியே னென்றாள்

சொன்னவை அத்தனை நான்புரிவேன் ஆனால் சொப்பனமல்ல வென்றாள்
முன்னே இருந்து அளித்திடுவேன் ஆனால் மொத்தமாயில்லை யென்றாள்
சின்னச் சின்னதெனத் தந்திடுவாய் நானோ சேர்த்துக் கணக்கிடுவேன்
என்ன கொடுப்பதில் வஞ்சனைசெய்திடில் வட்டிஎடுப்பே னென்றேன்

மன்றநடுவரைக் காணவில்லை அவர் மயமாய் ஏகிவிட்டார்
தென்றலே போதுமா தீர்ப்பு பிழைத்ததா தேவையைக்கூறு என்றேன்
கன்றிளம் மானுடை துள்ளலுடன் அவள்கண்களில் மின்னொளியாய்
நின்று இதுகன வில்லை என்றுஎன் நெஞ்சில்முகம் புதைத்தாள்

(முடிந்தது.)

மன்னிக்கவும். நீண்டநாட்கள் காக்க வைத்ததற்கு
அன்புடன் கிரிகாசன்

7
Your rating: None Average: 7 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


7

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kirikasan's படம்

நன்றி வினோத்! நன்றி வினோத்!


நன்றி வினோத்! நன்றி வினோத்! நன்றி வினோத்!

அன்புக்காக,ஒன்று

வருந்தலுக்காக இன்னொன்று

உறுதிக்காக,மூன்றாவது