kirikasan's படம்

சின்னவள்தான் இவள் சொல்லும் உண்மையிது சிந்தை மயக்கியவர்
எந்தன் கனவினில் வந்து நின்றார் இருகன்னம்தழுவிநின்றார்
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன் பின்னலைநீவுகிறார்
முன்னமிருந்து முகம்பிடித்தேமுழு வெண்மதிஎன்குகிறார்

ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல உத்தமமானவரே
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே வந்து நெஞ்சில்புகுந்துவிட்டார்
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை ஆரத்தழுவி விட்டார்
போருக்குவீரனாம் பெண்மனதுள் வந்துபித்தனாய் ஆடுகிறார்

பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம் பாம்பின் விஷம்என்குது
காலைவரை கண்ணை மூடினும் பக்கமாய் சேரத் துயில்நாணுது
வாலை பருவமும் நோயானது என்வண்ணம் குலைந்திடுதே
சேலை யிருப்பதே பாரமென்று பெருந் தீயில் உடல் வாடுதே

கண்கள் பனித்தன தொங்கி இமைதனில் கண்ணீர்த்துளி திரண்டு
பொன்னெனும் கன்னம்கடந்து இதழ்ழெனும் பூவில்கலக்கக்கண்டேன்
சின்னை இதழ் கசந்ததுவோ, அவள் செவ்விதழ் கோணலிட்டாள்
என்னைகடைவிழிகொண்டு கண்டுஇதழ் மீண்டும் விரித்துரைத்தாள்

பூவிழிமூட முடியவில்லைஒரு பொழுதும் தூக்கமில்லை
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒருநல்ல உணர்வுஇல்லை
ஆவிதுடிக்குது எண்ணியொரு ஆனந்தகீதம் இசைத்தபடி
கூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த கோலமென்றாகிவிட்டேன்

காற்றாகி வந்து கலகலத்தே என்னைக் கைகளால் நீவுகிறார்
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய் ஆடையைதள்ளுகிறார்
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியிலோடி பெருகுகிறார்
வேற்றுமையின்றியே வேண்டுமொருநீதி வேதனைபோயிடவே

கொட்டியதுபல பொன்விளை காசென கொல்லெனவே நகைத்து
பட்டெனக் கைதட்டிப் புன்னகைத்து சபாஷ் பார்த்தகனவா என்றார்
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஏய் நிற்கும் இளையபெண்ணே
குட்டிகதை கேட்கக் கூட்டிவந்தாய் இது குற்றம் எனச்சினந்தான்

செம்புயலாகவேசீறிப் பகைவெல்லும் சீராளன் வீரனே பார்
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே வேடிக்கையானதுகாண்
அம்புவிழிகொண்ட ஆரணங்கின் பக்கம் அர்த்தமுளதோ நீசொல்
நம்புவதா இதில்நானெது கூற நீ நல்லொரு தீர்ப்பளிப்பாய்

செந்தழல்வீசிய சின்னவளின் முகம் சோர்ந்து துவளக் கண்டேன்
எந்தளவோ ஓர் எல்லையற்ற சோகம் அங்கவள் மூச்சில்கண்டேன்
மந்தமெனும் இளம்புன்னகையிலொரு மாசறு காதல் கண்டேன்
செந்தமிழ் செல்வியின் பின்னும் கதையிலே நேசமிழைதல்கண்டேன்

பொல்லா மனம் கொண்ட பொய்மகளே ஒருபோதும் மன்னிப்பேயில்லை
வல்லவன் என்னிடம் சொல்லியவை தந்த வெஞ்சினம் போகவில்லை
நல்லதொரு நீதிநான் சொல்லுவேனென நங்கையை நோக்கி நின்றேன்
கல்லில் சிலையென கண்கள் பனித்திட கன்னம் சிவக்க நின்றாள்

(அடுத்ததில் முடியும்)

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

smariappan's படம்

அருமையாக உள்ளது...


4

அருமையாக உள்ளது... Clap Clap Clap


mari


prabumurugan's படம்

Nice


4

Nice


உண்மை பேசவே நினைக்கின்றேன்
கவிதை வளராதபொழுது........


vinoth's படம்

(No subject)


8

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...