vanithaselvam1212's படம்

நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டுவந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில்! அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று! * இதுநாள்காறும் பூமியாய் நின்று நிலவை ரசித்திருந்தவன்; நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து இராட்டிணம் சுற்றப் போகிறான் திருமண வானில்! * தமிழன்னையின் கழுத்தில் கைக்கட்டி கவிபடித்த பிள்ளையின் கழுத்தோடு கைகள் பூட்டி காதல் மொழி பேசக்காத்திருக்கிறாள் தோழி! * அதனாலேயே இனி ஞானியின் கவி கூடும் எனக் காத்திருக்கிறோம் ரசிகவின் ரசிகர்கள் நாங்கள்! * அன்புடனின் ‘வால்’நட்சத்திரத்தை வாழ்த்தும் பெரும் அன்பு நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் வாழ்த்தி நிற்கிறேன் – நானும் ஓர் சின்ன மின்மினியாய்! * என்றென்றும் முழு நிலவாக ‘ஜஹான்’ ஒளி வலம் வரட்டும் ஞானியின் வாழ்வில்! நிலவொளி மழையில் நனைந்து நனைந்து இன்னும் ஞானம் கூடட்டும் ‘ஞானி’க்கு! நன்றி, ப்ரியன்.
8.25
Your rating: None Average: 8.3 (4 votes)

கருத்துகள்

chandru2110's படம்

நல்ல கவிதை.


நல்ல கவிதை.


சந்துரு


Johnson's படம்

இது கவிதையா அல்லது கட்டுரையா


இது கவிதையா அல்லது கட்டுரையா அல்லது உரை நடையா...........

ranjitsachin's படம்

ஆமாம், ஷாருக்கான் கூட நிலாவில


ஆமாம், ஷாருக்கான் கூட நிலாவில இடம் வாங்கிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்...

Ragavan's படம்

அருமை...


4

அருமை...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..