காலமும் மாறுதுங்கோ கயமையின் கரிசனமே
கயமையின் கரிசனமோ பாவத்தின் ஏகாதிபத்தியம்
ஏகத்திற்கும் அவனொருவன் ஆட்சி நடக்கையிலே
நடைமுறை நடக்கின்ற பாதையிலே வழுக்கல்கள் ஏராளம்
ஏராளம் மக்கள் தொகை பெருக்கத்தால் தாராளம்
தாராளமென்று மனதில் வைத்து ஆபாச வாழ்க்கையினிலே
வாழ்க்கையது நலமாக அமைய நல்லதே நினைக்கவேண்டும்
நல்லதை நினைக்கையிலே உனைச்சேர்ந்தோர் பெருமையே
பெருமைக்கு ஆசைப்பட்டு ஆடம்பரம் வேண்டாமே
வறுமைக்கு அது அடிகோலும் அவசரமும் வேண்டாமே
நிதானம் தவறிப் போனால் மதியில்லா குணமாகும்
மதியில்லா குணத்தாரை மதியாரே உலகாரும்
விதியது வரட்டும் வழிவிடு அதன் வழியே
மதியது முந்தட்டும் சரித்திரம் படைக்கவே
புதியது உட்புக பழையவை புறமாகும் பார்
பழையது இருந்ததனால் இருப்பது மதிப்பது காண்
இனியது இனியெது என்பதை சிந்திப்பாய் மனமே
விதியும் மதியும் போட்டியிட வெல்வது சிந்தனையாக
எல்லாம் ஒன்று அதன் தொடக்கம் புள்ளியிலே
மீண்டும் புள்ளியை நோக்கி அண்டமும் அதிலடக்கம்
மாண்புமிகு மனிதயினமே நீயனுபவிக்கும் வாழ்க்கை
நாளை யார் நோக்கிபயணிக்கும் என்பதை மறக்காதே
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
மிகவும் அருமையான கருத்துக்
மிகவும் அருமையான கருத்துக் கொண்ட கவிதை......
"விதியது வரட்டும் வழிவிடு அதன் வழியே
மதியது முந்தட்டும் சரித்திரம் படைக்கவே"
"மாண்புமிகு மனிதயினமே நீயனுபவிக்கும் வாழ்க்கை
நாளை யார் நோக்கிபயணிக்கும் என்பதை மறக்காதே"
:hmம்ம்:
வரிகள் ஒவ்வொன்றும் மனதை யோசிக்கச் செய்கின்றது நண்பரே........

"நிதானம் தவறிப் போனால்
"நிதானம் தவறிப் போனால் மதியில்லா குணமாகும்
மதியில்லா குணத்தாரை மதியாரே உலகாரும்" என்ற கருப்பொருளை ஏற்றுக்கொள்கிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தானத்திலே சிறந்த தானம்
தானத்திலே சிறந்த தானம் நிதானம். "வாழ்க்கையது நலமாக அமைய நல்லதே நினைக்கவேண்டும்" எனும் வரிகள் நம் நெஞ்சங்களில் நிலைத்திட வேண்டும்.






