yarlpavanan's படம்

கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே!
இன்னும் பல வரிகள் எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!

5.25
Your rating: None Average: 5.3 (4 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

நெத்தியடி என்பது இது தானா


6

நெத்தியடி என்பது இது தானா அன்பரே!

aro...'s படம்

கருத்துக்களை கவிதையில்


5

கருத்துக்களை கவிதையில் சொல்லும் இவர் ஒரு போதி செடி...

அருமையான செய்தி Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

கருத்துத் தெரிவித்த


6

கருத்துத் தெரிவித்த நண்பர்களான rajudranjit, aro... ஆகியோருக்கு நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

கடன்பட்டார் நெஞ்சம் போல்


4

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குவதெல்லாம் அந்தக்காலம். இப்போது கடன் கொடுத்தோர் தான் கலங்க வேண்டியிருக்கிறது.

கடன்பட்டாவது வசதியாக காட்டிக்கொள்ள அலையும் உலகம் இது. அதை அறிந்தே வங்கிகள் வீடு, கார் இவற்றிற்கு கடன்கொடுக்க முன்வருகிறது.

கல்விக்கு கடன் பட்டாலாவது தவறில்லை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் கருத்தை முழுமையாக


தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
வங்கிகள் கடனை மீளப் பெற முடியாவிடின், இழுத்து மூடவேண்டியது தான். 200 அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டமைக்கு இதுவே காரணம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil