syedali's படம்

நாற்காலித் திருவிழா
பல்லாக்கில் வேட்பாளர்கள்
சுமைதூக்கும் வாக்காளர்கள்

                                                       ட்சியின் இறுதிநாளில்

காலியானது கஜானபெட்டி
பயிரை மேய்ந்தது வேலி
ளவுக்கு உகந்த பதவிகள்
கூட்டுக் களவாணிகள்
தொகுதி பங்கிடுதல்
கூட்டம் சேர்த்தவர்களின்
நாற்காலி ஆசை
புதிய கட்சிக் கொடிகள்
நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை
தர் சட்டைகளின் இயக்கத்தில்
சாயம்பூசிய திரைகூத்தாடிகளின்
மேடை அபிநயங்கள்
புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள்
தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள்
வீதியின் நடுகே
உயிர்தெழுந்த மேடைகளில்
ஆக்ரோசமாக அரங்கேறுகிறது
கானல் வாக்குறுதிகள்
யாரை போதிப்பதற்கு
அவதூறு பேச்சுகளால்
மேடைகளில் கொந்தளிக்கிறார்கள்
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்
ன்கொடை இனாம்களுக்கு
குடிஉரிமையை அடியரைவக்கும்
சுயநல வாக்காளர்கள்
காக்கி காவல் இருந்தும்
மண்ணில் உதிர்ந்து விழுகிறது
உதிரத்துளியும் உயிரும்
வரை காணவில்லை
தேடும் வாக்காளர்கள்
வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்
மாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

4.75
Your rating: None Average: 4.8 (4 votes)

கருத்துகள்

VISWAM's படம்

அருமை


4

அருமை

vinoth's படம்

நாற்காலித்


5

நாற்காலித் திருவிழா
பல்லாக்கில் வேட்பாளர்கள்
சுமைதூக்கும் வாக்காளர்கள்

ஆரம்பமே கலக்கல்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

என்ன செய்ய எல்லாம்


4

என்ன செய்ய எல்லாம் தலையெழுத்து!