Skip to main content

நான் ஒரு எதிர்பாலினம்

URI: http://tamilnanbargal.com/node/39143
கருத்துகள்: 2Likes: 1906 viewsசிறப்பு பதிவு

நான் ஒரு எதிர்பாலினம்

syedali's படம்

நான் 

ஒரு எதிர் பாலினம் 

விழி பிதுங்க வேண்டாம் 
பச்சையாக சொல்லப்போனால் 
பெண்'' 
 
எங்கள் 
எதிர் பாலினத்தின் பார்வையில் 
கொடிய விஷமும் சுகந்தமும் கலந்த 
 ம(மா)து பானம் 
 
அதிகம் 
நிமிர்த்தால்  வளைத்தால் ஓடியும் 
விலா எலும்பின் கோணல்
குணம் 
 
சுமைகள் 
எம் இனத்திற்கான 
இறைவனின் வரமோ சாபமோ 
இன்னும் புலப்படாமல் 
 
கொட்டும் 
இச்சைகளை ஏந்தும் 
கட்டில் குப்பத்தொட்டிகளாய் 
அன்றும் இன்றும் 
 

வேலி

சட்டங்களும் விதி விலக்குகளும்
எமக்கான எதிர் பாலினத்தின் ஆதிக்க 
சிறைகள் 
 
எம்மினத்தின் 
வெட்கத்த தளங்களில் பரிசுத்தத்தை 
தேடுகிறார்கள் வீதிகளில் எச்சில் உண்ணும்  

எதிர் பாலினங்கள் 
  
உறவில் 
பெயரில் எதிர் பாலினத்திற்கான
எம்மினத்தின் எதனை எத்தனையோ 
அவதாரங்கள் 
 
உடல் 
அவயங்களின் ஒன்றாம் இதயத்தின் 
பெயரால் எம்மினத்தை சூறையாடும் 
கயவ எதிர்பாலினங்கள்
 
வீரமாய் 
வீடாண்டு நாடாண்டு நின்றாலும் 
அடி சறுக்கி  வீழ்த்துகிறது 
பெண்மை பலகீனம் 
 
 
 
கவிகள் 
கதைகள்  புனைய சித்திரம் தீட்ட 
 துகில் உரிக்கப்டும்  கருப்பொருளாய் 
எம்மினங்கள் 
 
 
 
அன்றும் இன்றும் 
சந்தையில் காட்சியாக 
விற்பனை பொருளாக எம்மினத்தின் 
உடல் அவயங்கள் 
 
சரித்திர 
ஏடுகளில் குருதிக் கறைபடிந்த 
எம்மினத்திர்காக எதிர்பாலினத்தின் 
யுத்தங்கள்
 
எதிர்பாலினத்திற்கு
அகிலமாய் எம்மினம் இருப்பினும் 
கருவிலேயே கருவறுக்கிரார்கள்
எம்மினத்தை 
 
அது 
 நாளைய எதிர்பாலினத்தின் 
அழிவு!

 

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

நல்ல வரிகள் நண்பரே
கருத்தும் அருமை.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...