உயிர் பிரிந்து போனபின்னே
பிணமென்று பேரிட்டு
ஊர் கூடி மாலையிட்டு
உறவழ நட்பும் அழ
ஊர்வலமாய் காடு நோக்கி
செல்லும் முன்னே
நான் அழுகின்றேன்....
கண்களிலே நீர் மறைக்க
உளமோ உனை நினக்க
உடல் தளர்ந்து தடுமாறி
நாவால் பாடுகின்றேன்
என் குரலைக் கேட்ட பின்னும்
என் முன்னே வாராமல்
ஏன் இன்னும் தயங்குகிறாய்
இளவயதில் காதல் பாட்டு
நடுவயதில் செல்வச் சேர்ப்பு
ஆட்டம் என்ன பாட்டம் என்ன
கூட்டம் கூடி பெயர் தேடி
பட்டம் பெற்று புகழ் தேடி
இறுதியிலே ஒன்றுமில்லை
என்றறிந்து உனையடைந்தேன்
உள்ளத்தை உருக்கிடுவாய்
உயிர்தனையே அணைத்திடுவாய்
என்றென்றும் என் நினைவில்
நடனமாடும் பராசக்தியே
உலகெங்கும் உனைக் கண்டேன்
பசுமையான எழிற் பொழிலில்
பால்மணம் மாறா சிசு வடிவில்
தமிழாக நீ வந்தாய்
தரணியெல்லாம் வலம் வந்தாய்
தமிழனாகப் பிறக்க வைத்து
தலை நிமிர்ந்து நடக்க வைத்தாய்
நன்றி சொல்ல எனக்கு
வார்த்தையில்லை அடியே
எனையாளும் பராசக்தியே
எல்லோர்க்கும் நல்லனவே
நான் செய்தல் வேண்டும்
சொல்லாலே அவர் வாழ்வை
உயர்த்த வேண்டும்
எல்லோரும் ஒன்றாகக்
கூடிவாழ்ந்தால் இன்புடனே
இவ்வுலகம் சொர்க்கமாகும்
என் மனதில் தோன்றியதை
உன் முன்னே வைத்தேன்
உனையன்றி வேறு துணை
எனக்கு இல்லையடி
மனமிரங்கி வந்திடுவாய்
அண்டமெல்லாம் நிறைந்தவளே
என் தாயே பராசக்தியே.
கருத்துகள்
தமிழாக நீ
தமிழாக நீ வந்தாய்
தரணியெல்லாம் வலம் வந்தாய்
தமிழனாகப் பிறக்க வைத்து
தலை நிமிர்ந்து நடக்க வைத்தாய்
இந்த வரிகள் அருமை
சக்தியே அனைத்துமாக நம்முடன் இருக்க
அழுவதேன். 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இளவயதில் காதல்
இளவயதில் காதல் பாட்டு
நடுவயதில் செல்வச் சேர்ப்பு
ஆட்டம் என்ன பாட்டம் என்ன
கூட்டம் கூடி பெயர் தேடி
பட்டம் பெற்று புகழ் தேடி
இறுதியிலே ஒன்றுமில்லை
என்றறிந்து உனையடைந்தேன்........
உண்மை வரிகள்..........
நன்றாக உள்ளது........

"எல்லோர்க்கும் நல்லனவே நான்
"எல்லோர்க்கும் நல்லனவே
நான் செய்தல் வேண்டும்
சொல்லாலே அவர் வாழ்வை
உயர்த்த வேண்டும்
எல்லோரும் ஒன்றாகக்
கூடிவாழ்ந்தால் இன்புடனே
இவ்வுலகம் சொர்க்கமாகும்" ஐயா எனக்குப் பிடித்த வரிகள்!
பாராட்டுக்கள் ஐயா!

தமிழாக நீ
தமிழாக நீ வந்தாய்
தரணியெல்லாம் வலம் வந்தாய்
தமிழனாகப் பிறக்க வைத்து
தலை நிமிர்ந்து நடக்க வைத்தாய்
நன்றி சொல்ல எனக்கு
வார்த்தையில்லை அடியே
எனையாளும் பராசக்தியே!
என்ற வரிகளில்
என்னையே நான் மறந்து போகிறேனே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil













