சோழவந்தான் வெத்தல
போட்ட சின்னக்கிளி
சோடியா நாமலும்
போகலாம் நில்லுகிளி...
குத்தால சாரலுபோல நெஞ்சுக்குள்ள
நித்தமும் வந்துபோற வண்ணக்கிளி
செவப்பாயி சிங்காரி
ஏ.. வெட்டுக்கிளி
உன்னோட மனசுக்குள்ள
நான் கூண்டுக்கிளி...
தாவணிபோட்டு வந்தா
தளதளன்னு நீயிருப்ப
தக்காளிபோல உன்நெறத்துக்கு
தங்கம் ஈடாகுமா அழகுக்கு!
ஒத்தசடை பின்னலுல
ஏஉசிரயும் சோ்த்துப்புட்ட
கள்ளியே அல்லியே
என் சுந்தரியே
கல்யாணதேதி வைக்க
நாளும் வந்திருச்சு
உன்னோட சோ்ந்து
நானும் வாரேன்
நில்லுகிளி!!!!!!...
கருத்துகள்
சிறந்த கற்பனை
சிறந்த கற்பனை
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
சன்னலோரம் இருகிளியிருக்க
சன்னலோரம் இருகிளியிருக்க ஒத்துமையா
குத்துக்காலில் உக்காந்திருக்கும் பெண்கிளியாரோ
செந்தமிழ்தாசன் கனாக்கிளியுடன் சேர
மனக்கிளி சொன்னதுவே மனமகிழ் கவிதையென
வயல்வெளி அன்னாந்துபார்த்தா வெட்டவெளி
அழகான கவிதைப்பிறக்க அற்புதமே
காதல் கூவும் குயில்
காதல் கூவும் குயில்
நல்ல கிராமத்து வாசனை
நல்ல கிராமத்து வாசனை தந்தீர்கள்.






















