Skip to main content

நாட்டு புற‌ பாடல் (வந்துடுச்சே மழை வந்துடுச்சே)

URI: http://tamilnanbargal.com/node/40252
கருத்துகள்: 15Likes: 3702 viewsசிறப்பு பதிவு

நாட்டு புற‌ பாடல் (வந்துடுச்சே மழை வந்துடுச்சே)

G.Ramesh's படம்

தன்னானே  தன‌  தன்னானே..

தன்னானே  தன‌ தானனன்னே.

வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே

வானம்  பார்த்த‌  பயிர்,
வரண்டுப்  போண‌  பயிர்,
பச்சக்  கட்டி  வாழ‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

ஏறு  கட்டி  பூட்டி,
ஏழு  நாளும்  ஓட்டி,
சேறு  நல்லா  குழய‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

முத்து  நெல்ல‌  வெதச்சி,
பச்ச‌  நாத்த‌  பிடுங்கி,
நட்டு  வச்சு  பூட‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

நட்டு  வச்ச‌  நாத்து,
நல்ல‌  நெல்லு  வெலஞ்சி,
நம்ம‌  பசி  போக‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

பொறந்த‌  மண்ண‌  விட்டு,
பற‌ந்து  போண‌  மக்க‌,
கூடி  வந்து  சேர‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

ஒத்து  மையா கூடி,
நாளும்  ஒன்னா  உழச்சி,
உயர்ந்து  மக்க‌  வாழ‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

நாடு  வலம்  பொங்க‌,
வீட்டு  வலம்  பொங்க‌,
முத்து  முத்தா  மழ‌..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

நம்ம‌  தாகம்  தீர்க்க‌,
நம்ம‌  வாட்டம்  போக்க‌,
நல்ல‌  மழ‌  இங்கு..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

ஆறு  குளம்  எங்கும்,
நீரு  வெல்லம்  பொங்க‌,
நீண்ட‌  மழ‌  இங்கு..

(வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே)

இந்த‌  லோகம்  எங்கும்,
மக்க‌  பஞ்சம்  போக்க‌,
மகத்  தான‌  மழ‌..

வந்துடுச்சே மழ  வந்துடுச்சே
மண்ணெல்லாம்  ஊத்து  பொங்கிடுச்சே

மழைத்தேவனுக்கு  நாம‌  நன்றிசொல்லி,
நம்ம‌   மனெமெல்லாம்  நெறஞ்சிடுச்சே.

_______________________________________________

நன்றி,
(உங்கள்  கருத்தினை தெரிவிக்கவும்)

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

good

தர்ஷினி

vinoth's படம்

நன்றாக உள்ளது

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

உங்களின் ஊக்கத்திற்க்கு,
என்றும் என் நன்றி.

உங்களின் வாழ்த்துக்களுக்கு,
என்  நன்றி.

G.Ramesh's படம்

உங்களின் கருத்திற்க்கு,
என்றும் என் நன்றிகள்...
நண்பரே.

veerakrish's படம்

ஆஹா ஆஹா ஆஹா
என்ன அருமை என்ன அருமை
மண்வாசம் கமழும் வரிகள்
அப்படியே கிராமத்து காற்றை
சுவாசித்ததுபோல் ருந்தது......

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா

G.Ramesh's படம்

உங்களுடைய‌ கருத்துக்களுக்கு,
என் மிக்க‌ நன்றிகள்.