நல்லதொருக் காலம் வரும் கவலைப்படாதே
நமக்கொரு நேரம் வரும் மறந்துவிடாதே
கொடுமை செய்யும் கூட்டத்தையே ஒழித்துவிடுவோம்
அங்கே மனிதரெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவே
வறுமையில்லா வாழ்க்கதனை வளர்த்தெடுக்கவே
இளைஞர்களை ஒற்றுமையுடன் சேர்த்திடுவோம்
துடிப்புள்ள கொடையளிப்போர் ஒன்றுகூட
தடையில்லை வெற்றியெனும் முன்னேற்றமே
போராட்ட வாழ்க்கையிலே போராட்டம் நமக்கெதற்கு
தேரோட்டம் இழுப்பது போலே ஒன்றுகூடி மகிழ்வோம்
அங்கே வேண்டுவன உன் விருப்பமென எடுத்துகொள்
நம்பொருளை கேட்டுபெற வீணரல்ல நாமே
அடுத்தவரை ஏமாற்றும் கூட்டத்தின் கொட்டமடக்குவோம்
பெற்றவரை மனமகிழ பாராட்டி வளமளிப்போம்
கல்வி கற்று தந்த ஆசிரியருக்கு தக்க உதவிபுரிவோம்
எல்லோரும் உடன்பிறப்பாய் சொந்தம் வளர்ப்போம்
பொய்கள் பேசும் பொல்லாதவர் இல்லாதாக்குவோம்
களவு செய்யும் கள்வரையும் மறக்க செய்குவோம்
தவறு செய்யும் தகாதவர் தலையிலடித்து திருத்துவோம்
அங்கே இனிமை இனிமையென வளமை பெருக செய்குவோம்
நாடு வாழ நாமும் வாழும் சூத்திரம் சொல்லுவோம்
கேடு செய்ய முயலும் சூதகருக்கு சூடுபோடுவோம்
பாடுபட்டு வாழ்வதற்கு பாடம் புகட்டுவோம்
நாளைய இளையோர் நம்நாட்டின் பாதுகாவலராக்குவோம்
வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வாழ்க பாரதமே
எனும் புகழ் திகழ பாரினிலே சிறந்ததென உயர்த்திடுவோம்
நாளும் இனிமை அமைதிவழி வாழ்ந்திடவே
நல்லோராய் நாமனைவரும் கூடி மகிழ்ந்திடுவோம்
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
உங்களின் புதிய எண்ணங்கள்
உங்களின் புதிய எண்ணங்கள் சிறப்பாக உள்ளனர்; 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
"நாளும் இனிமை அமைதிவழி
"நாளும் இனிமை அமைதிவழி வாழ்ந்திடவே
நல்லோராய் நாமனைவரும் கூடி மகிழ்ந்திடுவோம்" என்று முடித்திருப்பது மிக மிக சிறப்பாக இருக்கிறது. நிறைய கருத்துக்கள் கொண்ட கவிதை இது. எனது பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.
"நல்லதொருக் காலம் வரும்
"நல்லதொருக் காலம் வரும் கவலைப்படாதே
நமக்கொரு நேரம் வரும் மறந்துவிடாதே" என்று
நண்பர் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்!

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வாழ்க பாரதம் வாழ்க பாரதம்
வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வாழ்க பாரதமே
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








