rajudranjit's படம்

நாளும் செய்தியில் நாலுவிதம்
நினைக்கையிலே நெருடல்கள் நெஞ்சினிலே

பாரும் உலகில் பாவிகளின் நடமாட்டம்
ஆவியானாலும் அதையும் சின்னாபின்னமாக்கும்

சட்டம் காசுக்கு தலைகுனிய சதுராட்டம்
பட்டம் படித்த புழுவென புல்லர்செயல்கள்

வேலியேப் பயிரை மேயும் வேடிக்கை
வாடிக்கையென வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள்

நாட்டில் ஆட்சிகள் அவ்வப்போது மாறினாலும்
ஏட்டில் வரும் காட்சிகள் மாறாக் கோட்பாடு

பெற்றவர் பதற மற்றவர் பார்த்திருக்க பாதகமே
கொற்றவனில்லா கொடுமையால் மக்களாட்சி அராஜகமே

பூமியின் சுழற்ச்சி காலமும் உருண்டோட‌
ஆதிக்கவர்க்கத்தின் சூழ்ச்சி மானிடம் வெருண்டோட‌

துணிந்து கையையுய‌ர்த்தி கேட்பதற்கு யாருண்டு
கேட்டால் அதைவெட்ட கூலிக்கு ஆளுண்டு

உண்ட சோறு செறிக்கு முன்னே
உடல் சிதறுது அநியாய கொலைகளினாலே

சட்டம் காக்கும் சட்டம் அடிமை காசிற்கு
பட்டம் வாங்கி வந்தவருக்கு பணமே குறிக்கோளே

ஊதியம் வாங்குவது அரசாங்கத்திடம் கேளும்
அடிமையாயிருப்பது அராஜகத்திடம் பாரும்

மக்களை திருத்த ஒருகூட்டம் மேடைதோறும்
திரைமறைவில் நாடகம் அது நடத்தும் சூதாட்டம்

கல்வி என்பது வியாபார மகசூல் பார்க்க‌
அரசுகள் கேட்கும் கட்டணம் ஒரு முன்னோட்டம்

வயிற்றுக்கு சோறு இல்லாமல் திண்டாட்டம்
படத்தின் நாயகன் வெற்றிக்கு பாலூற்றி கொண்டாட்டம்

மானம் கெட்ட பொருப்பில்லா பொதுமக்களாலே
ஈனம் கெட்ட செயலெல்லாம் அரங்கேற்றம்

எத்தனைப் பெரியார் வந்தாலும் ஒழியாது
இனி எத்தனை காந்தி வந்தாலும் நடக்காது

அன்றுழைப்பின் அருமை தெரிந்திருந்தார் முன்னேற்றம்
இன்றடுத்தவர் உழைப்பில் வாழக்கற்றறிந்தார் ஏமாற்றம்

உழைப்பை மறந்து இளைஞரெல்லாம் கட்சியினடிமை
கட்சியின் தலைவரோ நாளும் குளுகுளு வசதியிலே

திருந்துவோர் இனியில்லை பேசாதீர் நல்லதை
வருந்துவோருக்கு இனியில்லை நல்லதே மறவாதீர்

உடலது வருத்தி நாளைய தலைமுறை வாழ்ந்திடவே
தூய மனதுடன் பெற்றுதந்தனரே சுதந்திரத்தை

கொடுமையிலும் கொடுமை அதைக்காத்திட மறந்தனரே
அதனிலும் கொடுமை அறிந்தே கயமையை விதைத்தனரே

இறைவன் வந்தாலும் இலவசம் ஒழிந்தாலும் நடவாது
பொல்லாவுலகில் பொதுமக்களின் மனமோ திருந்தாது

சாக்கடைப்புழுவொரு நிம்மதி கொண்டிருக்கும் வேளை
போக்கற்ற மனித வாழ்வினிலே நிம்மதியில்லா வாழ்வே

கொள்ளையடிக்கும் கூட்டம் கண்டு அச்சப்பட்டார் அன்று
அவரிடம் இலாபமுண்டோ என்று ஆசைப்பட்டார் இன்று

பணமே மனமென ஆகிப்போச்சுதே மக்களின்று
ஈனமும் அவமானமும் பெருமைப் பேசுதே

கவனமாக இருப்போரே கலங்காதீர் காலமுண்டு
இல்லம் விட்டு வெளியில் வந்தால் மரணமுண்டு

மானமுள்ள மனிதர்களே தடுத்தல் வேண்டும் மரணம்
நான் சொன்னதனைத்தும் கவனம் கொண்ட நல்லோரை

என்றும்: சுஷ்ருவா

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

கருத்துகள்

aro...'s படம்

நாட்டு நடப்பை புர‌ட்டி


7

நாட்டு நடப்பை புர‌ட்டி எடுத்துவிட்டீர்.....;
Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நன்றி நண்பரே! இதுக்


நன்றி நண்பரே! இதுக் கவிதையெழுத வேண்டும் என்றக் காரணம் மட்டுமில்லை, நம்மால் ஏதாவது செய்யயியலுமா அதை எப்படி செய்ய ஆரம்பிப்பது அதை சீர் செய்ய எவ்வழி உகந்தது என்ற முயற்சியின் பயிற்சியே இக்கவிதை, ஊர்கூடி தேரிழுக்க தேர் பவனி வரும், புரிந்ததா நண்பரே!

Ponvannan's படம்

"மானம் கெட்ட பொறுப்பில்லா


7

"மானம் கெட்ட பொறுப்பில்லா பொதுமக்களாலே
ஈனம் கெட்ட செயலெல்லாம் அரங்கேற்றம்" இது மிக மிக உண்மையானது. சமுதாயச் சிந்தனை நிறைந்த நல்ல கவிதை. வாழ்த்துகள்

rajudranjit's படம்

நன்றி ஐயா! உண்மைதானே ஐயா!


நன்றி ஐயா! உண்மைதானே ஐயா! பொதுமக்கள் சரியாக இருந்தால் சட்டம், காவல்துறை, அரசியல்வாதிகளின் அட்டூழியம் எல்லாம் சம நிலையிலிருக்குமே,

வாக்களிக்க பணம் வாங்க என்று பொதுமக்கள் கை நீட்டினார்களோ அன்றே எல்லாம் எல்லை மீறி விட்டது, இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் ஜனநாயகம் எனும் மக்களாட்சி ஒழிந்து தனிப்பட்ட ஒருவரின் ஆட்சி அதாவது சர்வாதிகாரம் தலைதூக்க இது வழி செய்துவிடுமே
அதற்குக் காரணம் பொதுமக்களே!

yarlpavanan's படம்

சிறந்த மக்களாய(சமூக)ப்


7

சிறந்த மக்களாய(சமூக)ப் பார்வையுடன் புனைந்த கவிதை இது.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி நண்பரே! ஆனால் மக்களாயம்


நன்றி நண்பரே! ஆனால் மக்களாயம் மதி மாறிக் கொண்டு வருகின்றதே என்றக் கவலையும் காரணமாக அமைந்துவிட்டது இக்கவிதையெழுத,

vinoth's படம்

உழைப்பை மறந்து இளைஞரெல்லாம்


5

உழைப்பை மறந்து இளைஞரெல்லாம் கட்சியினடிமை
கட்சியின் தலைவரோ நாளும் குளுகுளு வசதியிலே

கொள்கை என்று கூறி கொடிபிடித்து சோம்பித்திரியும் தொண்டர்களுக்கு இதெல்லாம் உரைக்குமா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நாட்டுக்காக உழைக்கும் சில


நாட்டுக்காக உழைக்கும் சில இளைஞர்களுக்கு இது தெரியும் எனவே ஒதுங்கியிருக்கின்றார்கள்,

சிலர் எப்படியாவது இதிலுட்புகுந்து உலகுக்கு உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கின்றார்கள், அப்படிப்பட்டவர்கள் ஒன்றுமில்லாமல் வெறும் உழைப்பால் மனச்சோர்வடைந்து விரக்தியில் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொள்கின்றார்கள்,

சிலர் அடுத்தவர்களுக்கு குல்லா போட நினைக்கின்றார்கள், இவர்களே பதவி,பணம் அனைத்தும் பெற்று இன்புறுகின்றார்கள், இவர்கள் தான் சூழ்ச்சிக்காரர்கள், இவர்களை திருத்த இயலாது, இது போலுள்ளவர்கள் ஒழிக்கப்படவேண்டும்

என்ன நண்பரே சரியா நான் சொல்வது!