நாளைய உலகம் நம்மை வாழ்த்தும்
நயமுடன் நல்லதை நால்வருக்கு செய்யின்
நல்லதென்பது நம்மவருக்கு மட்டுமின்றி
நாம் வாழும் உலகத்தவர்க்கும் இணைந்தே.....
தீயது இணைய தீர்க்கமாய் வெட்டியெறி
நல்லதெனில் எதிரியையும் சேர்த்துக்கொள்
உடலது உழைக்க மனமது உறங்காதே
மனமது விழிக்க மகத்துவம் காண்பாய்
நாம் வாழ நால்வரைக் கெடுக்காதே
நால்வரைக் கெடுக்க நாளைய உலகு காரியுமிழும்
வாழ்க்கையென்பது பிறப்பது ஒருமுறை போல்
நீ இறந்த பின்னும் வாழ்வது நல்லது மட்டும் நிலையாக
மானிடப் பிறப்பில் சாதிப்பது அதிகம்
நல்லது செய்ய அனைத்தும் அடங்கும்
கருத்துகள்
பிறருக்கு நன்மை செய்ய
பிறருக்கு நன்மை செய்ய வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களூக்குத் தீங்கு மாத்திரம் செய்திட வேண்டாம். மானிடப் பிறப்பில் நல்லது செய்பவன் இறந்த பின்னும் பூமியில் வாழ்வது நிச்சயம்.
உங்களின் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
"நன்மை செய்யப் பிறந்த -
"நன்மை செய்யப் பிறந்த - நீ
தீமையாவது செய்யாதிரு" என்று
சுவாமி விவோனந்தர் சொன்ன பின்
'நல்லது செய்' என்பதற்கு - நான்
சொல்வதற்கு ஒன்றுமில்லை!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நல்லது செய்கையில் உலகம்
நல்லது செய்கையில் உலகம் போற்றும்
நாளைய உலகம் நம்மை வாழ்த்தும்
நல்லது செய்வோம்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






