நல்லோரெல்லாம் என் நட்பாகுக
பொல்லார் நட்பு பிரிந்துபோக
வல்லோனாக இடம்வலம் நல்நட்பாகுக
உள்ளம் அறிந்து நல்லோருள்ளம் நானறிய
எல்லாம் வல்ல இறைதுணை புரிய
நல்லதொரு நட்பு இன்பமென கூட
பொருப்பவர் என்போர் பெருமதிப்பிற்குறியோர்
பெருமதிப்பிற்குறியோர் எம்முடன் இணைய
வெகுமதியில்லா நட்பென நல்லோர் நட்பாகுமே
அண்ணண் தொடங்கி அன்புடன் ஆசிரியனென நட்பு
அருமை நட்பு ஆற்றல் மிக்கதொரு நட்பு
வயதிலில்லை மனத்தால் கூட நல்நட்பாகுகவே
கருத்துகள்
இன்முகம் காட்டிப் பழகுவது
இன்முகம் காட்டிப் பழகுவது மட்டும் நட்புக்கு அடையாளமாகாது; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
இதைத்தான் வள்ளுவனும்:
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு' என்று கூறியுள்ளான்.
தங்கள் எண்ணப்படியே
தங்கள் எண்ணப்படியே நல்நட்புகள் அமைக....
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நட்புக்கும்
நட்புக்கும் அகவை(வயது)க்கும்
தொடர்பில்லைக் காண்
உள்ளத்தால் விரும்பியதே
நட்பு
அறிஞர் பொன்வண்ணன் எடுத்துக்காட்டிய
குறள் கூறுவதே நல்நட்பு.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










