விவாதமெனும் போர் வந்தாலும்
வினைகளெமை சூழ்ந்து வந்தாலும்
சொல்லெனும் வில்லெடுத்து
பேனாவால் கூரிட்டு
கருத்தெனும் அம்பெடுத்து
தமிழினால் அவை தொடுத்து
காண்போர் கண்வியக்க
எதிர்ப்போர் எட்டி நிற்க
கதிர்போல் தமிழ் வளர்க்க
நற்றமிழ் உரைப்போம்
நானிலத்தில் உறுதியாய்
இறுதிவரை.
உரிமையோடும் உணர்வோடும்.
இளங்கவி
கருத்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள் நண்பரே...
பாடுங்கள் பல பாடல்
நற்றமிழ் பேணுவோம் என்றே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தமிழின் ஆர்வலரே வாழ்க
தமிழின் ஆர்வலரே வாழ்க நீர்
அழகெனும் தமிழ் கொண்டு
குறுகிய விளக்கமெனினும்
பெருகும் தமிழ் உம்மால்
டணிஸ்கரனுக்கு எனது கரவொலி!

இளங்கவிக்கு வாழ்த்துகள்
இளங்கவிக்கு வாழ்த்துகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இயல் இசை நாடகம் எனும்
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழை முத்தமிடும் இளங்கவியே முத்தான நற்றமிழ் கவிதையை வழங்கிய உங்களை உரிமையோடும் உணர்வோடும் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.








