ஹலோ..ஹ..லவ்..
இதய அழைப்பில்
இன்முகத்தின்
இனிய குரலில்
நலம் விசாரிப்பு ,
நம்மில் எப்போதும்
நடைமுறைப்படுகிறது.
மெதுவாய் ஆரம்பித்த
பேச்சை
பொதுவாய் ஏதேனும் பேசி
உன் புன்முறுவல்
உடைக்கிறேன் நான்.
பொய்க்கோபம் கொண்டு
உன்னை திட்டி
மகிழ்கிறேன்.
நீ..மெய்கோபம்
கொண்டு மௌன விரதமிருக்கிறாய்.
பேசடி செல்லம்
என்று கெஞ்சல்
விடுக்கிறேன்.
மௌனத்தின் மொழியாய்
கண்ணீர் பேசுகிறாய்.
கண்ணீர் களைய
இச்-சொன்று கொடுக்கிறேன்.
நச்-சென்று முடிகிறது
நம் ஊடல்..கூடலில்..
கருத்துகள்
அருமை
Submitted by dharshi on செவ்வாய், 06/04/2010 - 5:41pm.
அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/




