nandhalala's படம்

தினமும் அமர்ந்த மேஜை நாற்காலி,
சேர்ந்து விளையாடி பின் ச‌ண்டையிடும்
நம் ந‌ண்ப‌ர் கூட்ட‌ம்,
சுமந்து சென்ற புத்தகச்சுமை,
நாம் வளர்த்த மரநிழல்,
ஒவ்வொரு வருடமும்
புதிய வகுப்புகள்,
அன்பாய் மிரட்டும்
ஆசிரியர் கூட்டம்,
வண்ணம் மாறாத சீருடை,
மிரட்டி செல்லும் காவலாளி,
நுழைவாயிலில் காத்திருக்கும்
மிட்டாய் வண்டி,
மணியடிக்க ஏங்கி நிற்க்கும்
நண்பர் கூட்டம்,
ம‌ற‌க்க‌ முடியாத‌ எத்த‌னையொ
மலரும் நினைவுக‌ளோடு,
மீண்டும் ஒருமுறை ச‌ந்திப்போமா??!!!
எப்போது கேட்க‌ப்போகிறோம்
மீண்டும்
நம் வ‌குப்பு ச‌த்தம்....

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

dharshi's படம்

"மலரும் நினைவுகள்" திரும்ப


"மலரும் நினைவுகள்" திரும்ப அவை வந்தா நல்லாத்தான் இருக்கும் பட் வர வாய்ப்பில்லையே..


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

திரும்ப வராது... நினைவுகளில்


திரும்ப வராது... நினைவுகளில் மட்டுமே மலரும்


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

ஆமாம் நண்பா, அந்த நினைவுகள்


ஆமாம் நண்பா, அந்த நினைவுகள் என்றும் இனிமையானவை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நல்ல கவிதை நினைவுகளில்


நல்ல கவிதை

நினைவுகளில் மட்டும் வந்தால் தான் இனிமையான சுகம் தரும்

நிஜமாகவே வநதால் .........
அதே வகுப்பு
அதே பிரம்பு Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ஓ ரொம்ப அடி வேண்டி இருக்கீங்க


ஓ ரொம்ப அடி வேண்டி இருக்கீங்க போல அது தான் பிரம்பு நினைவு...
(நாங்க அடி வேண்டினதில்லை)


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

ஹெ.. யாரு நானா? கிளாஸுக்கு


ஹெ..
யாரு நானா?
கிளாஸுக்கு பிரம்பு கொண்டு போறதே நாந்தான்,
லீடராக்கும்,


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

லீடர் என்றா அடி விழாதா லீடர்


லீடர் என்றா அடி விழாதா லீடர் விடுற தப்புக்கு அடி கூட விழும்...
( ///கிளாஸுக்கு பிரம்பு கொண்டு போறதே நாந்தான்///
பொல்ல கொடுத்து அடி வேண்டுறது என்றது இதை தானோ )


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நான் தான் பேரெல்லாம் எழுதி


நான் தான் பேரெல்லாம் எழுதி போட்டு எல்லோருக்கும் அடிவாங்கி கொடுக்கிறது.

வாங்க நாம உங்க "இந்த பக்கம் வராதீங்க" பக்கத்துக்கு போகலாம்,
இது நல்ல கவிதை பக்கம், இதில நாம இப்படி அரட்டை அடிச்சா vnandhan வருத்தப்படுவார்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

"நான் தான் பேரெல்லாம் எழுதி


"நான் தான் பேரெல்லாம் எழுதி போட்டு எல்லோருக்கும் அடிவாங்கி கொடுக்கிறது."

தன்வினை தன்னை சுடும் என்ற மாதிரி எல்லாம் சேர்த்து கடைசியா நீங்க வேண்டுறத மறைக்காதீங்க....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

புரியலையோ "நிழல்களின்


புரியலையோ

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ஹையோ ஹையோ


ஹையோ ஹையோ


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

கரீட்டு, இப்படித்தான்


கரீட்டு, இப்படித்தான் பிரம்பால அடிபட்டவங்க எல்லாம் கத்துவாங்க

நான் இரசிப்பேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

தெரியும் உங்க


தெரியும் உங்க (அடிபட்ட)அனுபவம் ஜாஸ்தின்னு..


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

உங்களுக்கு அடிபட்ட அனுபவம்


உங்களுக்கு அடிபட்ட அனுபவம் இருக்குன்னா எல்லோரும் அப்படின்னு நினைக்கிறீங்க போல

போங்க போங்க புள்ளகுட்டிகள படிக்க வைங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

பழைய நினைவு என்றதும் ஏங்க


பழைய நினைவு என்றதும் ஏங்க நானா பிரம்ப பற்றி சொன்னேன் நீங்க தனே பிரம்பையே நினைசீங்க...
பிறகு இப்ப போய்... சரி சரி போங்க.... எதோ போங்க...

///போங்க போங்க புள்ளகுட்டிகள படிக்க வைங்க//

உங்க புள்ள குட்டிங்க மாதிரி படிக்காம எங்க புள்ள குட்டிங்க இல்லைங்க, நாங்க நல்லா படிக்க வைக்குரமுங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

பாவம் என்னால பலபேரு


பாவம் என்னால பலபேரு அடிபடவேண்டாம் என்கிற நல்ல கருணை உள்ளம் ஹிஹி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

பாவம் vnandhan காலைல வந்து


பாவம் vnandhan காலைல வந்து இந்த கருத்துகளைப்பார்த்துட்டு அழப்போறார்
Sad


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


nandhalala's படம்

கவிதையை விட உங்க உரையாடல்


கவிதையை விட உங்க உரையாடல் சுவாரஸ்யம்!!!


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


VISWAM's படம்

ஆஹா!!!!!!!!!!!!!!!!


ஆஹா!!!!!!!!!!!!!!!!

nandhalala's படம்

நன்றி நண்பரே.


நன்றி நண்பரே.


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி