நண்பா,
முதலில் உன்மீது நட்பு கொண்டேன்
பின்பு காதல் கொண்டேன்
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது.
கருத்துகள்
என்னமோ சொல்றீங்க உங்கள்
என்னமோ சொல்றீங்க
உங்கள் கூற்றுப்படி,
நட்புக் கொள்வோரையெல்லாம், நட்பு கொண்டோர் மீதெல்லாம் காதல் கொள்ளலாம்.
தோழியே, நட்புக் கொள்பவன்
தோழியே,
நட்புக் கொள்பவன் நண்பன்
காதல் கொள்பவன் காதலன்
என்பது சரித் தானே..............
சரியாக சொன்னிர்கள் தோழி நல்ல
சரியாக சொன்னிர்கள் தோழி
நல்ல நண்பன் நல்ல காதலனாக இருக்க முடியும்
ஆனால் காதலன் நல்ல நண்பனாக இருபது கடினம்
நட்பைக் காதலிப்பதில்
நட்பைக் காதலிப்பதில் தவறில்லை.......
ஆனால் இன்றைய நாட்களில் பெண்களுடன் காதலனாக மாற வேண்டுமென்றால் முதலில் நட்பு என்ற முறையில் தானே இன்று பலர் பெண்களை அப்ரோச் செய்கின்றனர்.
நண்பர் ஜோஸி சொன்னது போல் இன்று சிலரல்ல பலர், நண்பர்களாக இருந்து தானே, காதலர்களாக மாறியுள்ளனர்.
இருக்கலாம், ஆனால் அவர்களின்
இருக்கலாம், ஆனால் அவர்களின் எண்ணமும்,லட்சியமும்
காதலரவது மட்டுமே...
அதற்கு அவர்கள் நட்பை ஆயுதமாக்குகிறார்கள்,
நட்பை சிர்குலைகிறார்கள்............
இவர்களை போன்ற சிலரால்
இன்று ஆண்,பெண் இடையேயான
உண்மையான நட்பு சந்தேகபடபடுகிறது,
கொச்சைப்டுத்தபடுகிறது./// சரியாக சொன்னீர்கள் இதை நான் அனுபவத்தில் ஆமோதிக்கிறேன். இந்த தளத்திலேயே இந்த அனுபவம் என்னக்கு உண்டு...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
Dear, I like to join
Dear,
I like to join this argument. If you accept a friend as a lover you definitely loss your friend. But every love never ends in marriage. To accept friend as a lover this is not so wrong but every friendship continues till our death. Friendship is safe than love.
H.Rampradeep
தமிழர் தானே நீங்க தமிழ்ல
தமிழர் தானே நீங்க தமிழ்ல எழுதுங்க.....
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நான் சொல்லவந்த கருத்து
நான் சொல்லவந்த கருத்து என்னவென்றால் நன்கு புரீந்து கொண்ட
இரு நண்பர்கள் நல்ல கணவன் மனைவியாக இருக்க முடியும் .
எனேன்றால் எவன் ஒருவன் பெண்ணிடம் எதையும் (எதையும்)
எதிர் பார்க்காமல் நட்பு கொள்கிறானோ அவன் அந்த பெண்ணை
உயிர் உள்ள வரை நன்றாக பார்த்து கொள்வான் .
கடைசியாக ஒன்று
தோழி அவர்களே நீங்கள் சொல்ல வந்த கருத்து நண்பன் என்றும் நண்பனே
என்பதை நான் ஒற்று கொள்கிறேன்.
ஆனால் நாம் இன்றைய நடைமுறை வாழ்க்கையல் பெண் அறிமுகமே இல்லாத
ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு படும் தொல்லைகள் அதிகம் ஏனென்றால்
இருவரும் மனதை பார்க்காமல் பணம் அழகு ஆகியவற்றை மட்டும் பார்கேன்றனர் .
நட்பை காதலிக்கும்
நட்பை காதலிக்கும் நீங்கள்
நண்பனை காதலிக்கலாம் என்ற
குற்றை ஒத்துகொல்றேன்களா
நல்ல நட்பு நல்ல துணையாக
வர முடியுமா?
H.Rampradeep
//ஏனெனில் காதல் என்பது வேறு,
//ஏனெனில் காதல் என்பது வேறு, நட்பு என்பது வேறு,
இரண்டையும் சம்மந்தபடுத்துவது முடியத காரியம்.///
இது சரிங்க...
நட்புக்குள் காதல் சாத்தியமே இல்லை. நண்பர்கள் காதலராகும் போது நட்பும் , காதலும் அங்கே களங்க படுகிறது என்பதே உண்மை.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நீ என்னிடமும் பேச வேண்டும் -
நீ என்னிடமும்
பேச வேண்டும் - நட்பு
நீ என்னிடம் மட்டுமே
பேச வேண்டும் -காதல்
நட்பு காதலில் மாறுவதில் என்னை
பொறுத்தவரையில் தப்பில்லை
உன்னைப்பற்றி தெரியாத கணவன்
உன் நட்பை சந்தேகிக்க வாய்ப்புண்டு
அனால்
உன் நட்பை கணவனாக வந்தால்
உன்னை நன்கு அறிந்தவன்

H.Rampradeep
நல்ல
நல்ல கவிதை.
---------
தேன்மொழி:
இந்த கூற்றை ஏற்றுகொள்ள முடியவில்லை,
ஏனெனில் காதல் என்பது வேறு, நட்பு என்பது வேறு,
இரண்டையும் சம்மந்தபடுத்துவது முடியத காரியம்.
----------
உங்கள் கவிதையின் படி நட்பின் மீது காதல் கொள்ள முடிகிறது என்றால் நண்பன் காதலன் ஆவதும் சாத்தியமே.
ஒரு நண்பன் காதலை சொல்கிறான் என்றால் அவன் உடனே கணவன்/காதலன் ஆகிவிடமுடியாது, அந்த பெண் ஒத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஒத்துக்கொண்டால் நட்பு காதலாகியதற்கு அந்த இருவருமே பொறுப்பு.
கணவன் மனைவிகள் நல்ல நண்பர்களாக இருப்பது சாத்தியம்.
காதலர்கள் நல்ல நண்பர்களாக இருப்பது சாத்தியம்.
இந்த நட்பு அப்பா மகன் அம்மா மகன் அண்ணன் தம்பி மேனேஜர் ஊழியர் என யாரிடத்தும் இருக்கலாம்.
புரிந்து கொண்ட நல்ல பழக்கம் நட்பாகிறது.
நட்பு காதலாக மாறமுடியாது என கூறமுடியாது.
ஆண் பெண் நட்பில் காமம் வரும் போது அல்லது அவருடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற சுயநலம் வரும் போது காதல் பிறக்கிறது.
அவ்வாறு ஒரு நண்பன் காதல் சொல்ல அவனிடம், "உனக்கு நட்பு என்றால் என்ன என்று தெரியுமா" என கோபப்படும் அதே பெண் ஒரு வேளை அந்த நண்பனை மிகவும் பிடித்திருந்தால் அவள் கண்டிப்பாக யோசிக்கிறேன் என்று தன்னைத்தானே ஏமாற்றி சில நாட்களை நகர்த்திவிட்டு சம்மதம் தெரிவித்திருப்பாள்.
ஆக நட்பு காதலாவது அவரவர் மனதுக்கு பிடித்த ஆட்கள் சொல்லும் போது அது சரியாகவும், பிடிக்காத ஆட்கள் சொன்னால் தவறாகவும் ஆகிறது. இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இரண்டையும் சமப்படுத்த
இரண்டையும் சமப்படுத்த முடியும் என்று கூறவே இல்லை. இரண்டும் கண்டிப்பாக வேறு வேறு தான்.
தான் கொண்ட காதலை ஒருவர் கேவலமாக பேசினால் கோபம் வருவது இயற்கை. அது அவரது காதல் துணையின் மீது கொண்ட மதிப்பு. காதலை இழிவு படுத்தினால் அந்த துணையை இழிவுபடுத்துவதாக அவர் நினைப்பதே கோபத்திற்கு காரணம், காதலையும் அந்த துணையையும் ஒன்றாகவே நினைக்கிறோம்.
இதே கோவம் நட்பை தரம் குறைத்தாலும் வரும். அது நண்பனின் மீது கொண்ட அன்பு.
இதே நபர் அந்த துணை ஏமாற்றிவிட்டபின்பு, அல்லது நட்பி்ன் துரோகத்தை கண்ட பின்பு அவரிடம் நட்பையோ காதலையோ தரம் குறைவாக பேசினால் கோவம் வராது. காரணம் அனுபவம்.
அப்போது வருத்தமும் வெறுப்புமே வரும்.
நட்பில் சுயநலமே இல்லை என கூற முடியாது
நன்றாக படிக்கிற நண்பனுடன் சிநேகம்.
அவன் திட்டினாலும் கோவம் வராது. பிறகு படிப்பில் ஏதாவது உதவி செய்வான் என்ற சுயநலம்
பணக்கார பையனின் சிநேகம்
ஆபத்தில் உதவுவான் என்ற சுயநலம். அலலது அவனுடன் சுத்தினால் ஹோட்டல், பார்ட்டி என ஜலியாக சுத்தலாம் என்ற சுயநலம் (பணக்கார பையனிடம் பழகும் பெண்களையும் சேர்த்து)
ஜாலியாக பழகுவனிடம் மட்டுமே பழகுவது (நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சுயநலம்)
மனம் திறந்து பேசுபவனிடம் மட்டுமே பழகுவது (சுயநலம்)
நாம் நல்லவன் என்றால் மற்றொரு நல்லவனையும் கெட்டவன் என்றால் கெட்டவரையும் சிநேகம் கொள்வதும் சுயலம் தான். நம் குணத்துக்கு ஏற்ற ஆள் என்பதால்.
இவ்வாறு எல்லா நட்பிலும் சில சுயநலம் மறைந்தே இருக்கிறது.
பிரிந்த நண்பர்களை ஏன் பிரி்ந்தீர்கள் என கேட்டால் வரும் பதில்
"இவ்வளவு நாள் பழகியிருக்கோம், அவனுக்கு எவ்வளவோ செய்திருக்கேன். எனக்குன்னு ஒண்ணு வரும் போது கைவிட்டுட்டான்"
இதுவே பதிலாக இருக்கும்.
இந்த பதிலுக்கு என்ன காரணம்?
மறைந்திருந்த சுயநலத்தின் தேவைவந்த சமயத்தில் தேவை நிறைவேறாததால் அவனது நட்பு இனி தேவையில்லை.
இதுவே பலருடைய நடைமுறை வாழ்க்கை அனுபவம்.
பேசும் போது காதலை தெய்வீகமாக சொல்வது போல் நட்பையும் பேசலாம். ஆனால் அதுவே உண்மை ஆகாது.
"ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே."
-- இது தத்துவ ஞானி சாணக்கியனின் அனுபவ மொழி.
அன்பு என்பது நமக்கு வேண்டியவர்கள் மீது மட்டுமல்ல, எதிரியின் மீதும் இருக்க வேண்டும்.
"வேண்டியவர்கள்" -- நமக்கு தேவைப்படுபவர்கள் : )
ஒருத்தரை நமக்கு நட்பாகவோ காதலாகவோ பிடிக்கிறது என்றால் அவரால் நமக்கு கஷ்டம் வராது என நம்புகிறோம். (சுயலாபம்)
அதே சமயம் நமக்கு ஒத்துவராத ஒருத்தரிடம் நட்பு பாராட்ட மாட்டோம். ஏன்? சுயலாபம்.
"ஒத்துவராத" -- (........ ?)
"நண்பர்கள் காதலித்தால் நட்புக்கும் காதலுக்கும் இழுக்கு" என்கிறீர்கள்.
இதற்கு முன்பே பதில் கூறிவிட்டேன். இவ்வாறு இழுக்கு என நினைப்பது அந்த நட்பு நாம் எதிர்பார்த்த காதலாக இல்லாமல் இருக்கும் போது மட்டும் தான். எதிர்பார்த்த காதலுக்கு தகுதியான ஆளாக இருந்தால் இந்த இழுக்கு தெய்வீக காதலாகிவிடும் : )
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அவர் அவர் மணம் போலவே
அவர் அவர் மணம் போலவே நடக்கும் ஆனால் முதலில் நாம் பழக ஆரம்பிக்கும் முன் நம் என்னம் எவ்வாறு உள்ளன அதை நாம் யேசிக்க வேண்டும்
நான் வினோத் சொன்ன இந்த வரியை
நான் வினோத் சொன்ன இந்த வரியை ஒற்றுகொள்கீறேன்
ஆக நட்பு காதலாவது அவரவர் மனதுக்கு பிடித்த ஆட்கள் சொல்லும் போது அது சரியாகவும், பிடிக்காத ஆட்கள் சொன்னால் தவறாகவும் ஆகிறது. இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை
வணக்கம் தோழியே,,,
வணக்கம் தோழியே,,,
என் தனிப்பட்ட கருத்து இது தான் :
நட்பை நேசிக்கும் வரை நான் நண்பரை மட்டுமே நினைப்போம். ஆனால் நண்பனின் நட்பைக் காதலிக்கும் போது (தங்களின் கூற்றுப்படி), அதற்குள்ளாக " நாம்" என்பது தானாகவே வந்து விடுகின்றது.... எனக்குத் தெரிந்த பலரே, நட்பில் ஆரம்பித்து, நட்பைக் காதலித்து இன்று தம்பதிகளாய் ஆகி இருக்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை " நட்பில் ஆரம்பித்து நண்பர்களாக வளருபவர்களின் அன்பு, நட்பும் என்றும் குறையாது.......மரணம் வரை....
நட்பில் ஆரம்பித்து, காதலில் / காமத்தில் / திருமணத்தில் முடிந்தால் அந்த நொடியே அங்கு நட்பு மரித்து விடுகின்றது......" ஆகவே நான் உன் உயிரை நேசிக்கின்றேன் ஆனால் உன்னுடலை அல்ல என்பதுப் போல் "நட்பின் மீது காதல்" என்பது சாத்தியமற்றதே.........ஆனால் நட்பு நட்பாகவே நேசிக்கப்படும் போது நண்பர்களின் திருமணத்திற்கு பின்னும் நட்புத் தொடரும், வளரும்.......
நண்பர் வினோத் சொன்னதுப் போல்,// " நட்பு காதலாக மாறமுடியாது என கூறமுடியாது.
ஆண் பெண் நட்பில் காமம் வரும் போது அல்லது அவருடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற சுயநலம் வரும் போது காதல் பிறக்கிறது.
அவ்வாறு ஒரு நண்பன் காதல் சொல்ல அவனிடம், "உனக்கு நட்பு என்றால் என்ன என்று தெரியுமா" என கோபப்படும் அதே பெண் ஒரு வேளை அந்த நண்பனை மிகவும் பிடித்திருந்தால் அவள் கண்டிப்பாக யோசிக்கிறேன் என்று தன்னைத்தானே ஏமாற்றி சில நாட்களை நகர்த்திவிட்டு சம்மதம் தெரிவித்திருப்பாள். ""//
நட்பை நட்பாக பார்க்கும் வரை எந்தவொரு சுய நலமும்,காமமும் வராது.
தோழியே, நான் நட்பைத் தவறாக
தோழியே,
நான் நட்பைத் தவறாக சொல்லவில்லை..... மேலும் எனக்கு இன்றளவும் நட்பை மட்டுமே நேசிக்கும் பெண் தோழிகள் பலர் உண்டு.......
நட்பு காதலாகலாம் தவறில்லை.
நட்பு காதலாகலாம் தவறில்லை. அதில் புரிதலுக்கு பின் தான் காதல் வரும். ஆனால் காதலித்து நண்பராய் நடிக்கும் போது உண்மையான குணத்தை அறிய முடிவதில்லை.
தோழர் ஜோஸ் கருத்தை நான்
தோழர் ஜோஸ் கருத்தை நான் ஒற்றுகொள்கீறேன்
அனால்
நட்பு கதலாகுவதும்
நட்பு நட்பாக மட்டுமே இருப்பது
அவரவர் விருப்பம் - இதை பற்றி
நான் மேலும் விவாதிக்க
விரும்பவில்லை
H.Rampradeep
மீண்டும் நானே நீ
மீண்டும் நானே
நீ வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய்...
தோழர் விஸ்வம் எழுதிய கவிதையை மீண்டும் படிக்கவும் தாங்கள் அருமை என்று சொன்னது
சரியா தவறா
பிறகு உங்கள் கவிதைக்கு ஏன் பதில் ......
H.Rampradeep
பொய் தானே மெய்? வ்னந்தன்
பொய் தானே மெய்?
வ்னந்தன் கவிதையை படி தோழியே
H.Rampradeep
நண்பர்கள் காதலர் ஆகலாம்
நண்பர்கள் காதலர் ஆகலாம் தவறில்லை. ஏனெனில் புரிதலுக்குப் பின் தான் காதல் உருவாகிறது













