நட்பு தேடி ஒரு உயிர்!...
====================
செயற்கை உணவின்
ஜீரணிப்புகள்!
கண்டுபிடிப்புகளில்
செயற்கை சுவாசங்கள்!
தொலைந்த மனிதத்தில்
மருகங்கள்!
நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்!
தேவைகளின் பிடியில்
சொந்தங்கள்!
இன்னும்
கலைக்கப்பட்ட
கனவுகள் மீதமிருக்க
ஒருதுளி
நம்பிக்கையில்
இயற்கையின்
நட்பு தேடி
ஒரு உயிர்!...
--
வினோத் கன்னியாகுமரி
கருத்துகள்
"நம்பிக்கை
"நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்..."
எல்லா நட்பும் துரோகதில் இல்லை தோழா..!!
சரியான நட்பை தேர்வு செய்யாதது அவரவர் குற்றமே...
நட்பின் குற்றமல்ல...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இல்லையே வினோத், தர்ஷினி
இல்லையே வினோத், தர்ஷினி பொதுவாகத்தானே கருத்துக்கொடுத்திருக்கிறா.................
நானும் தனிப்பட்ட எவரயும்
நானும் தனிப்பட்ட எவரயும் குறித்து சொல்லவில்லை
தனிப்பட்ட எவரின் அனுபவத்தையும் குறிப்பிட்டும் சொல்லவில்லை
கவிதையில் வரும் "நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்!" என்ற வசனத்திற்கு எனது கருத்தை சொன்னேன் அவளவும் தான்.
மிக்க நன்றி
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ஆமாம் இவற்றை வெறுத்தவர்
ஆமாம் இவற்றை வெறுத்தவர் வெறுக்கவேண்டிய காரணம் சரியான நட்பை தெரிவுசெய்யாமை என்பதையே நான் குறிப்பிட்டேன் நல்ல நட்பை அவர் தெரிவு செய்திருந்தால் வெறுப்பு வராது என்பது எனது தனிப்பட்டகருத்து.
காரணம் "காயங்களுக்கு நல்ல நட்பு மருந்தாக இருக்கும் என்று"
அதற்காக யாரையும் குறிப்பிட்டு அல்ல,
"உங்களை என் கருத்து காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன்"
"இத்தளத்தில் நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள், சக நண்பர்களை எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல."
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
தர்ஷி சொல்வது யாரையும்
தர்ஷி சொல்வது யாரையும் குறிப்பிட்டு சொல்வது போல் இல்லையே நண்பா நண்பர்களுக்குள் வீண் கலக்கம் வேண்டாம்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
உள் மனம் ஓயாமல்
உள் மனம் ஓயாமல் சொல்கிறது
காய்ந்த சருகின் விரைப்பை விட்டு
வளைந்து நௌpயும் இலையின்
மென்மை வேண்டுமென்று
ஒற்றைப் புல்லின் கூரிய நோக்கும்
சீரிய பார்வையுமே சிந்திக்கத் து{ண்டுகிறது
நிலையற்றது வாழ்க்கை நதி
மாற்றங்கள் மட்டுமே நம்மை புதுப்பிக்கும் வழி
எண்ணங்களுக்கு புது
வண்ணக் கலவை பூசி
புதியதோர் உலகுக்கு
புதுமனைப் புகுவிழா செய்வோ








