rajudranjit's படம்

நல்லதொரு நண்பன் நான் பெற்ற செல்வம்
அது யாழ்பாவாணர் எனும் அன்பரே

அன்பாலே தமிழாலே தன்னுள்ளம் தந்தார்
என்கவி வளர நிலமாக நீராக அமைந்தார்

இனமது இனத்துடன் இணைய எம்மினம் தமிழினம்
மனமது மனத்துடன் மணக்க யாழார் எனை ஆட்க்கொள்ள‌

நல்லென நவிலும் நல்லதொரு நண்பரே
என் தவற்றை சுட்டிக் காட்டும் அருமை அன்பரே

உம்போன்ற நட்பமைய நான் செய்த புண்ணியம்
நினைத்து உவகை கொள்ள அன்பென கண்ணது சிந்தும்நீர்

என்பா பொருமையுடன் படித்து பொறுத்து
நல்கருத்தெழுதும் உம்பொறுப்பு யாருக்கு வரும்

பாவம் ஐயா பொன்வண்ணனும் மாட்டிக்கொண்டார்
நீரிருவரும் தப்பிக்க இயலாது நட்பெனும்சிறையிலிருந்து

நட்பெனும் நல்லிதயங்களை எமக்கு தந்தது எம்தமிழ்
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நட்பது இறுக!

8
Your rating: None Average: 8 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

பொன்வண்ணனும்


8

பொன்வண்ணனும் யாழ்பாவாணனும்
உமக்குத் துணையாவார்கள்...
இனிய தமிழில் எளிய நடையில்
தாங்கள் வடிக்கும் பாவினில் வரும்
பாடுபொருளும் வழிகாட்டலும்
எங்களை உம்பக்கம் இழுக்குதையா!
தமிழைப் பேண தமிழர் நாமிணைய
எவர் வருவார் எம்மைப் பிரிக்க?
தமிழ் நண்பர்கள் எல்லோரும்
தமிழைப் பேண ஒன்றிணைவோம் வாரீர்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி என் அன்பரே!


நன்றி என் அன்பரே!

Ponvannan's படம்

நாம் நட்பு கொண்டது தமிழால்.


8

நாம் நட்பு கொண்டது தமிழால். இந்த இனிய உறவை ஏற்படுத்தித் தந்த "தமிழ் நண்பர்கள்" இணையம் நம்மை மட்டுமல்லாமல் அனைவரது இதயங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்பதே என் ஆசை. வாழ்க தமிழ். வளர்க தமிழ்.

rajudranjit's படம்

நன்றி ஐயா!


நன்றி ஐயா!