yarlpavanan's படம்

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!

இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காழான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

6.16667
Your rating: None Average: 6.2 (6 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

நடைபேசி இன்று நல்ல குடும்ப


7

நடைபேசி இன்று நல்ல குடும்ப உறவுகளுக்கு தடைபேசிக் கொண்டிருக்கிறது..
வாழ்த்துக்கள்

yarlpavanan's படம்

உண்மை தான்.....


உண்மை தான்.....


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நீங்க நல்ல அழகாய்


4

நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க

ஹாஹா
சும்மா கிடைச்ச மாட்டுக்கு பல்லை பார்த்தா எப்படி Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


aro...'s படம்

ஏங்க நீங்க நல்ல அழகாய்


5

ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...

நடை பேசி பற்றி பேசும் தங்களுக்கு இந்த நக்கல் பேச்சு தேவைதானா,......... Laughing out loud Big smile Smile Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

மதிப்புக்குரிய நண்பர்கள்


5

மதிப்புக்குரிய நண்பர்கள் vinoth, aro... ஆகியோருக்கு,
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) ஆகிய மூன்றும் நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி என்பதை வெளிப்படுத்தவே
"நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க" என
கிண்டலாகப் புனைந்தேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

அன்பரே! எது எப்படியோ


8

அன்பரே! எது எப்படியோ இருக்கட்டும் உம்மை கிழவன் என்று சொன்ன அந்த அழகி ஓடிமறைந்த திசையை கண்டீரா?

வேறொன்றும் தவறாக நினைக்காதீர் மீண்டும் நடைபேசியை அவருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமல்லவா?

yarlpavanan's படம்

கவிதையில் இப்படி நடந்ததாகக்


கவிதையில் இப்படி நடந்ததாகக் கூறி எழுதியது எல்லாம் கற்பனையே! ஒரு செய்தியைச் சொல்ல இவ்வாறு புனைந்தேன். உண்மை எனின் பதிவின் அடிக்குறிப்பில் இட்டிருப்பேனே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil