BaluGuruswamy's படம்

நகையற்றோருக்கு வேண்டுமானால்
நகைகள் போட்டுப் பார்க்கலாம்.

பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற அமைதியேபோல்,
விலையற்ற பண்புகளால் நிலையுற்ற அன்புடையாள்.

அன்புடன் என்மகளுக்கு நான்போட்ட நகைகள்,
உண்மையிலேயே
தற்போதுதான் தாம் மிக அழ்குற்றதாக அகமகிழ்ந்தன!

அமைதியாய் ஒளிரும் அவளைக்கண்டு,
தம் பகட்டிற்காக அவைகள் மிகவும் வெடகப்பட்டன.

இவளின் தந்தையோ யான் என
விந்தைகொண்டு என் சிந்தை மகிழ்கிறது.

வாழ்க்கை இவள்வசம் வாழ்வதற்கு,
அரும்தவம் இயற்றுகிறது.

வசந்தமோ
இவளே எமது உரிய சொந்தம் என்கிறது.

பாலு குருசுவாமி.

6.66667
Your rating: None Average: 6.7 (6 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

பொன்நகையை கழுத்தில் சுமந்து


7

பொன்நகையை கழுத்தில் சுமந்து வந்த மகளையும்
புன்னகையை இதழில் சுமந்து வந்த தந்தையையும்
காண குறுநகையுடன் காத்துக் கொண்டிருக்கிறது உலகம்.

"பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற அமைதியேபோல்,
விலையற்ற பண்புகளால் நிலையுற்ற அன்புடையாள்" என்ற வரிகள் மிக‌ச் சிறப்பாக அமைந்துள்ளன. பாராட்டுக்கள்.

BaluGuruswamy's படம்

நன்றி, நண்ப. மிக்க


10

நன்றி, நண்ப.
மிக்க நன்றி.
பாலு குருசுவாமி.

BaluGuruswamy's படம்

நன்றி, நண்ப. மிக்க


10

நன்றி, நண்ப.
மிக்க நன்றி.
பாலு குருசுவாமி.

BaluGuruswamy's படம்

நன்றி, நண்ப. மிக்க


10

நன்றி, நண்ப.
மிக்க நன்றி.
பாலு குருசுவாமி.

BaluGuruswamy's படம்

நன்றி, நண்ப. மிக்க


10

நன்றி, நண்ப.
மிக்க நன்றி.
பாலு குருசுவாமி.

vinoth's படம்

பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற


5

பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற அமைதியேபோல்,
விலையற்ற பண்புகளால் நிலையுற்ற அன்புடையாள்

இவ்வரிகள் மிகவும் இரசிக்க வைத்தது.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

"பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற


7

"பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற அமைதியேபோல்,
விலையற்ற பண்புகளால் நிலையுற்ற அன்புடையாள்." என்ற
வரிகளில் சொல்லப் பட்டவை
தங்க நகைகளை விட உயர்ந்தவையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற


6

பகையற்ற உள்ளத்தில் மிகையுற்ற அமைதியேபோல்,
விலையற்ற பண்புகளால் நிலையுற்ற அன்புடையாள்.

அன்புடன் என்மகளுக்கு நான்போட்ட நகைகள்,
உண்மையிலேயே
தற்போதுதான் தாம் மிக அழ்குற்றதாக அகமகிழ்ந்தன! Clap Clap Clap
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
==============================================

rajudranjit's படம்

(No subject)


5

Clap Clap Clap