vinoth's படம்

நகர்கிறது காலம்!

நகர்கிறது காலம்!
================

அந்திமாலை
ஆர்ப்பாட்ட சாலை
அடிபட்டு கிடக்கிறது ஒரு
முனகல்!

யார் பெற்ற பிள்ளையோ
நெஞ்சில் கைவைத்து
யாரோ ஒரு
தாய்!

உணவிற்கு இன்று
கஷ்டமில்லை
ஈர இரத்ததில்
ஈக்கள்!

பயமுடன் பலபேரை பார்த்து
வழிந்தோடும் இரத்தத்தை
நாவில் சுவைக்க ஒரு
நாய்!

வேகத்தின் பிடியிலிருந்து
பார்வைகளை வீசியபடி
சில கண்கள்!

காவலரின் கேள்விகளால்
காணாமல் போன
மனிதம்!

கருணையில் ஒரு பார்வையில்
காட்சியை மனப்படமாக்கி
கவிதை கிடைத்தது
கவிஞன்!

தன் கடமை இங்கு முடித்து
அடுத்த ஓட்டுநரை தேடி
நகர்கிறது காலம்!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

10
Your rating: None Average: 10 (10 votes)

கருத்துகள்

dharshi's படம்

அருமை


அருமை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...