joshi2010's படம்

என் நண்பனே,
தோற்றுப் பார்
வெற்றியின் அவசியம் தெரியும்
வெற்றியின் தூரம் தெரியும்

தோற்றுப் பார்
உண்மை உறவு தெரியும்
உண்மை நட்பு தெரியும்

தோற்றுப் பார்
உன் பலவீனம் தெரியும்
பலத்தின் அவசியம் தெரியும்

தோற்றுப் பார்
மனிதத்தின் நிஜமுகம் தெரியும்
இறைவனின் அன்பு தெரியும்

தோற்றுப் பார்
தோல்வியின் காரணிகள் தெரியும்
வெற்றியின் தேவை தெரியும்

தோற்றுப் பார் நண்பனே
ஜெயிப்பதற்கு முன்
முதலில் தோற்றுப் பார்.....
வெற்றியின் உயரம் தெரியும்
வெற்றியை தக்கவைக்க முடியும்........

தோற்றுப் பார்
உனது முயற்சியில்
தோற்றுப் பார் ஆனால்
முயற்சிப்பதில் தோற்றுவிடாதே.........

முயன்றுப் பார்
முயன்றுப் பார் மீண்டும்
முயற்சி செய்
தோறகும் வரை அல்ல‌
ஜெயிப்பது வரை.......

6.11111
Your rating: None Average: 6.1 (9 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

கீழே விழுவது மீண்டும்


7

கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே எனும் கருத்தை உள்ளடக்கி எழுதப்பட்ட கவிதை இது. பலமுறை தோல்வி காண்பது வெற்றியை நோக்கி செல்வதைக் குறிக்கும். முயலாமல் வெற்றி இல்லை. எனவே முயற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் உள்ளதுதான் தோல்வி. எனவே தோற்றுப் பார்த்தால் வெற்றியை விரைவில் அடையலாம். நல்ல கவிதையை எழுதிய ஜோஷிக்கு பாராட்டுகள்.

joshi2010's படம்

தங்கள் பாராட்டுக்கு மிக்க


தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.........
"முயற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் உள்ளதுதான் தோல்வி."

மிகவும் நல்ல கருத்து ஐயா.....


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


joshi2010's படம்

தங்கள் பாராட்டுக்கு மிக்க


தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.........
"முயற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் உள்ளதுதான் தோல்வி."

மிகவும் நல்ல கருத்து ஐயா.....


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

தோல்வி தான் வெற்றியின்


7

தோல்வி தான்
வெற்றியின் பின்னூட்டி
தோல்வி கண்டதால் கற்றதே
வெற்றிக்கு வழிகாட்டி!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


aro...'s படம்

அருமையான கருத்து...


5

அருமையான கருத்து... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

ஆம். தோற்றால் தான் வெற்றியின்


4

ஆம். தோற்றால் தான் வெற்றியின் அருமை புரியும்
ஒரு விளையாட்டு வீரனின் மனநிலையோடு சில நேரம் தோற்று பார்ப்போம். விட்டுக்கொடுப்போம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


joshi2010's படம்

பாராட்டிய அனைத்து தமிழ்


1

பாராட்டிய அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் என் நன்றி........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

தோல்வியே வெற்றியின்


8

தோல்வியே வெற்றியின் படிக்கட்டு என்று படித்ததும் உணர்ந்ததும் உண்டு நண்பரே!

தோற்றுப்பார் அருமையானக் கவிதை, ஆனால் எல்லாவற்றிலும் தோற்று தோற்று படிக்க வேண்டுமானால் நாம் இருக்கும் வரை நிம்மதி என்பது இல்லாமல் போகும்,

ஒரு தோல்வியை வைத்து ஒவ்வொருக் காரியத்திலும் படிப்பனையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்,

முயற்சி என்பதை இழக்காத வரை தோல்வியொரு பொருட்டல்ல,

நமது சிந்தனையும் செயலும் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டுமானால் பல தோல்விகள் வருவதை முன்பே உணர்ந்து காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் சுகித்து வாழலாமே!

எனது தனிப்பட்டக் கருத்தை தவறாக எண்ண வேண்டாம், தவறாக இருப்பின் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்!

joshi2010's படம்

வணக்கம் நண்பரே.... இது


1

வணக்கம் நண்பரே....

இது உங்கள் தனிப்பட்ட கருத்தாயிருந்தாலும் நிச்சம் நல்லதொரு கருத்து தான்....... "முன்னமே உணர்ந்து, அதற்கேற்றார் போல் தோல்விகளிலிருந்து தப்பிக்க எல்லோராலும் முடியாது..... ஆனால் ஒரு முறை தோல்வி கண்டால் ... கண்டிப்பாக முன்பிருந்ததை விட ஆயிரம் மடங்கு விழிப்பும், எச்சரிக்கையும், வந்துவிடும் என்பதே என் தாழ்மையான கருத்து...........

தோல்வியால நேரம் வீணாய் ஆனாலும் அதுவும் ஒரு அனுபவமே........
மேலும் தாங்கள் கூறியதில் இதுவும் உண்மைத் தான்...

"முயற்சி என்பதை இழக்காத வரை தோல்வியொரு பொருட்டல்ல," Clap Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com