sentamildasan's படம்

தைமகள் பிறந்தாள்....

மூத்தகுடி தோற்றுவித்த
வசந்தகால வரவின்
வரவேற்பு விழா........

செங்கரும்பு முற்றத்தில்நிற்க
வண்ணமிட்ட கோலத்தின்
நடுவில்
பசுஞ்சாணி மேனியில் பூசணிப்பூ
சிரித்திருக்கும்..........
மாவிலைத் தோரணம்
மயக்கும்......

கழனிகள் செழித்து
முற்றிய கதிர் அறுத்து
ஞாலம் காக்கும் கதிரோனை வணங்கி
பச்சரிசி மண்குடத்திட்டு சமைக்க
பொங்கிய நீரெல்லாம்
இப்புவியில் தீவினை
அணைக்கட்டும்.......

தைமகள் பிறந்தாள் - இனி
வரும்காலம் வசந்தம் வீசி
வரட்டும்....
பெரும்பான்மை நாட்களை
பெரும் தவிப்பில் விட்டுவிட்டோம்
இருக்கும் நாட்களில் இனியவை
கொண்டுவர
இதோ
தைமகள் வந்தவிட்டாள்
வரவேற்போம்..........
இனியேனும் வழிபிறக்கட்டும்!

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.....

நாளும் நலம் பெருகட்டும்......

5.75
Your rating: None Average: 5.8 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்


5

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.....


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Hajamytheen37's படம்

பொங்கல் நல்வாழ்த்துகள்....


5

பொங்கல் நல்வாழ்த்துகள்....


எம்.ஹாஜா, குடந்தை


rajudranjit's படம்

கவிதை அருமை நண்பரே! எனது இனிய


6

கவிதை அருமை நண்பரே! எனது இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்! Clap

yarlpavanan's படம்

எல்லோருக்கும் தமிழ்


7

எல்லோருக்கும்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil