தோழிகள்...,
உன்
மதிய உணவை பிடுங்கி தின்ன காரணம்...
"அழகியின் உணவை" சாப்பிட்டாவது
"அழகி" ஆகிவிடலாம்
என்ற நப்பாசைதான்...!!
*******************************
எல்லாரும் உறங்கும் போது
இந்த உலகத்தை மறந்து தூங்குவார்கள்...
நானோ....
என் "ஒரே உலகமான"
உன்னை காண்பதற்காக மட்டுமே
தூங்க போகிறேன் .!!
*******************************
கவனம் சிதறும்படி
ஆடை உடுத்தும்
பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால்
கவனம் ஈர்த்த
அழகி நீ...!!
*******************************
சிரிக்க தெரிந்தவர்கள்
கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள்
என்பார்கள்...
ஆனால் நானோ உன்னை
சிரிக்க வைத்து
தேவதைக்கு நெருக்கமானேன்...!!
********************************
என்னிடம் அப்படி
என்ன விசேஷம்..? என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்உண்மையை சொல்வதனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...
தோழி..!!
கருத்துகள்
அருமை... நீங்கள் 'தபூ சங்கர்'
அருமை...
நீங்கள் 'தபூ சங்கர்' ரசிகரா....

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
கவனம் சிதறும்படி ஆடை
கவனம் சிதறும்படி
ஆடை உடுத்தும்
பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால்
கவனம் ஈர்த்த
அழகி நீ...!!
நீங்கள் இத்தேவதையிடம் நெருக்கமானதற்க்கு மேல் சொல்லப்பட்ட வரிகள் போதும்
உண்மையில் உங்கள் தேவதை தேவதை தான் .......
வாழ்த்துக்கள் தோழரே
என்றும் கவியுடன்
அ.செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
nee sirikavaipathal than aval
nee sirikavaipathal than aval thevathai agiraalo...?????!!!
vary good poems pa
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"










