"ஜன கன மன" என இந்திய தேசிய கீதம் ஒலித்தால் நம்மையும் அறியாமல் நமது உடல் உயர் ரத்த அழுத்தத்தில் சிலிர்க்கும். அப்படி ஒரு வலிமை அதற்க்கு உண்டு அவற்றை பற்றிய தகவல் நம்மில் பலருக்கு அறியாது. அவற்றை பற்றி சற்று விரிவாக பார்போம்.
> நமது தேசிய கீதம் இயற்றியவர் இரபிந்தரநாத் தாகூர்.
> டிசம்பர் மாதம் 27,1911 கொல்கொத்தாவில் இந்திய தேசிய காங்கிரசால் முதலில் பாடப்பட்டது.
> இந்திய தேசிய கீதமாக ஜனவரி 24,1950 ஆண்டு இந்தியா அறிவித்துக்கொண்டது.
> நமது தேசிய கீதம் தாகூர் ஆல் 1919 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்(Morning Song Of India) மொழி பெயர்க்கப்பட்டது.
> பாட வேண்டிய கால அளவு;
*முழு பாடலையும் 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
*குறுகியதை 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
> கீதாஞ்சலி என்னும் கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது நமது தேசிய கீதம்.
> அண்டை நாடான பங்களாதேஷ் இன் தேசிய கீதமும் தாகூர் அவர்களால் இயற்றப்பட்டவை தான்
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
தமிழாக்கம்
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
கருத்துகள்
அருமையான பதிவு. எழுந்து
அருமையான பதிவு.
எழுந்து நின்று ஒருமுறை படித்தேன்..!
நன்றிகள்..
annaa
நல்ல பதிவு நன்றி
நல்ல பதிவு
நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அனைவரும் தெரிந்து கொள்ள
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...
அருமையான பதிவு!!!!!
" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......
ஆனந்தன்






